மணிப்பூரில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் 8 பேர் புதைந்து பலி; - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

மணிப்பூரில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் 8 பேர் புதைந்து பலி;

ராணுவ வீரர்கள் உள்பட 70 பேரைக் காணவில்லைஇம்பால், ஜூலை 1 மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பிராந்திய ராணுவ வீரர்கள் உள்பட 70க்கும் மேற்பட் டோர் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவே கனமழை பெய்து வருகிறது. அசாம், திரிபுராவில் பெய்த மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இந்த மாநி லங்களில் பலத்த சேதம் ஏற்பட் டுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசா மில் மழை, வெள்ளத்தால் நூற்றுக் கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மணிப்பூரிலும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இங்குள்ள நோனி மாவட்டத்தின் துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாம் அருகே  பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் பலியாகினர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த  நிலச்சரிவில்  பிராந்திய ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள் உட்பட 70 பேர் சிக்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  அவர்களை  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவின்போது ராட்சத பாறைகள் உருண்டு, இஜெய் ஆற்றில் விழுந்ததால் ஏராளமானோர் இதில் சிக்கி புதைந்து இருக்கலாம் என கருதப்படுவதால் பதற்றம் நிலவுகிறது. இதனால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும், நிலச்சரிவினால் சரிந்த மண், பாறைகள் இஜெய் ஆற்றில் விழுந்ததால், நீரோட்டம் தடைப்பட்டு இங்குள்ள அணை உடையும் அபாயமும் ஏற்பட்டுள் ளது. அணை உடைந்தால் நோனி மாவட்டத்தின் தாழ்வான பகுதி களில் பெரும் அழிவு ஏற்படும். இதனால், அப்பகுதி மக்கள் எச்ச ரிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை 37இல் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு இருப்பதால், போக்குவரத்து பாதித்துள்ளது.  மீட்பு பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment