இந்திய கடவுச்சீட்டு : 60 நாடுகளில் செல்லும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

இந்திய கடவுச்சீட்டு : 60 நாடுகளில் செல்லும்

புதுடில்லி, ஜூலை 26 ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்லும் மக்கள், அந்த நாட்டு அரசிடம் விண்ணப்பித்து முன்கூட்டியே விசா பெற வேண்டும். அப்போது தான், விமானத்திலேயே ஏற்றுவார்கள். அங்கு குறிப்பிட்ட காலம் தங்கியும் நாடு திரும்பி விட வேண்டும். இல்லை என்றால், சிறைதான். இருப்பினும், இருதரப்பு உறவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட நாடுகளின் குடிமக்கள் தங்கள் நாட்டுக்கு முன்கூட்டியே விசா பெறாமல் வரலாம் என்ற சலுகையை பல நாடுகள் அளிக் கின்றன. அங்கு போன பிறகு விமான நிலையத்திலேயே விசா பெறலாம். அதன் படி,  இந்திய கடவுச்சீட்டை வைத்துக் கொண்டு, விசா இல்லாமல் 60 நாடுகளுக்கு செல்ல முடியும்.

உலக நாடுகளுக்கான பன்னாட்டு கடவுச்சீட்டு தரவரிசையை ‘ஹென்லி’ என்ற கடவுச்சீட்டு குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 199 நாடு களின் கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதில், ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் கடவுச் சீட்டை வைத்துக் கொண்டு, 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.  சிங்கப்பூர், தென்கொரியா 2ஆவது இடத்தை பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூலம், 192 நாடுகளுக்கு செல்லலாம். ஜெர்மனி, ஸ்பெயின் 3ஆவது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்கா 7, ரஷ்யா 50, சீனா 69ஆவது இடங்களை பிடித்துள்ளன. இந்தியா 87ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அண்டை நாடான ஆப்கானிஸ்தான், 199ஆவது நாடாக கடைசி இடத்தை பிடித்துள்ளது. எந்தெந்த நாடுகள் இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் சில:

  • ஓசியானியா பகுதியில் உள்ள 9 நாடுகள்.
  • மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஜோர்டான், ஓமன், கத்தார்.
  • அய்ரோப்பியா நாடுகளில் அல்பேனியா, செர்பியா.
  • கரீபியன் பகுதி உள்ள 11 நாடுகள்.
  • ஆசிய கண்டத்தில் உள்ள பூடான், இலங்கை, நேபாளம் உட்பட 10 நாடுகள்.


No comments:

Post a Comment