அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு

சென்னை, ஜூலை 3  சென்னை போன்று எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த மாவட்டங்களை 3 ஆகப் பிரித்து ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புத்தகக் காட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தில், தமிழ்நாட்டில் சென்னை புத்தகக் காட்சி போன்று மாவட்டம்தோறும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் முழு விவரம்:

 மாநிலம் முழுவதும் புத்தக் காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஓதுக்கீடு .

 மாவட்டங்கள் 3 ஆக பிரிக்கப்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்

டுள்ளது.

 வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சம் ஒதுக்கீடு

 மீதம் உள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 மாநில அளவில் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு. இந்தக் குழுவில் நூலகத்துறை, பாடநூல் கழகம், பதிப்பாளர் சங்கம் உறுப்பினராக நியமனம்.

 மாவட்ட அளவில் கண்காட்சிகளை நடத்த ஆட்சியர் தலைமையில் குழு. இந்தக் குழுவில் அனைத்துத் துறை அதிகாரிகள், வாசகர்கள், பதிப்பாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம்.

No comments:

Post a Comment