40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

 விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.7.2022 அன்று மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை விழுப்புரம் மருந்து விற்பனையாளர் சங்க கட்டடத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அரங்க பரணிதரன், மாவட்டத் தலைவர் சுப்பராயன், மண்டல இளைஞர் அணி செயலாளர் பகவான் தாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா, மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், விழுப்புரம் நகர செயலாளர் பழனிவேலு, சேந்தநாடு பழனி, முருகதாஸ், சரண்ராஜ் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்து உரைத்தனர்.  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கழகத் தலைவரின் கட்டளையை ஏற்று விடுதலை ஏட்டுக்கு மாவட்டம் முழுவதும் ஆயிரம் சந்தாக்களை திரட்டி தருவது எனவும், ஜூலை 30ஆம் நாள் அரியலூரில் நடைபெற உள்ள மாநில இளைஞரணி மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது எனவும், ஒன்றிய வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் அமைப்புப் பணிகளை சிறப்பாக செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் களத்தூர் செல்வகுமார் நன்றி கூறினார். விடுதலை சந்தா சேர்க்கை புத்தகங்கள் அனைவரிடத்திலும் வழங்கப்பட்டு விரைவாகவும் முழுவதுமாகவும் நிறைவு செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டது.

***

சிதம்பரம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
 விடுதலை சந்தா புத்தகங்களை கு.பெரியண்ணசாமி (திருமுட்டம் ஒன்றிய தலைவர்), இரா.செல்வகணபதி (காட்டுமன்னை ஒன்றிய தலைவர்), கு.தென்னவன் (பரங்கிப்பேட்டை ஒன்றியம்), அ.சுரேஷ் (கீரப்பாளையம் ஒன்றியம்), ஆசிரியர் நெடுமாறன் (புவனகிரி ஒன்றியம்), அன்பு.சித்தார்த்தன் (சிதம்பரம் மற்றும் குமராட்சி ஒன்றியம்), சுமதி பெரியார் தாசன் (மகளிரணி சார்பில்) பெற்றுக் கொண்டனர்.
****
திருச்சி மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சோமரசம்பேட்டை நற்குணம், மகாமணி, திருஞானம், ஆகியோர்க்கு 50 சந்தாவுக்கான புத்தகங்கள், திருச்சி மாநகரத் தலைவர் சோமரசம்பேட்டை துரைசாமி, ஜெபஸ்டியான், ராஜசேகர், ஆகியோர்க்கு சந்தாவுக்கான புத்தகங்கள், திருச்சி, திருவரங்கம் நகரத்தலைவர் கண்ணன்.மாவட்ட செயலாளார் மோகன், தேவா, முருகன், சசிக்காந்த், ஆகியோருக்கு 70 சந்தாவுக்கான புத்தகங்கள், திருச்சி, திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பன். ஆண்டிராஜ், அசோக்குமார், செல்வம், ஆகியோருக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்கள், திருச்சி, காட்டூர் தலைவர் காமராஜ். செயலாளர் சங்கிலிமுத்து, கனகராஜ், கல்பாக்கம் இராமச்சந்திரன், சிவானந்தம், இராஜேந்திரன், ஆகியோருக்கு 60 சந்தாவுக்கான புத்தகங்கள் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகருக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், நண்கொடை புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் (8.7.2022)
கழக தொழில்நுட்ப அணிசெயலாளர் வி.சி.வில்வத்திற்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள், திருவெறும்பூர் ஒன்றியம் பெல் ஆறுமுகத்திற்கு 20சந்தாவுக்கான புத்தகங்கள், மண்டல மகளிரணி செயலாளர் கிரேசிக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள் மாவட்டமகளிர் பாசறை தலைவர் அம்பிகாகணேசன். காட்டூர்ரூபி, மாவட்ட மகளிரணி செயலாளர் சங்கீதா காட்டூர் கவுரி, ஜெயில் பேட்டைவசந்தி, அமுதா ஆகியோர்க்கு 60சந்தாவுக்கான புத்தகங்கள்,  மற்றும் மணப்பாறை நகர செயலாளர் மு.ரமேஷ், ஒன்றியத் தலைவர் பாலு, நல்லசிவம், அசோக் ஆகியோருக்கு 60சந்தாவுக்கான புத்தகங்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், நண்கொடை புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் (8.7.2022)
***
தருமபுரி மேனாள் மாவட்டத்தலைவர் வீ.சிவாஜியிடம் நல்லம்பள்ளி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆசிரியர் துரை. கருணாகரன் ஓராண்டு விடுதலைச் சந்தா ரூபாய் 2000 அளித்தார்.  கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எஸ் .அலெக்சாண்டர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளனிடம் வழங்கினார். உடன் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் மற்றும் தோழர்கள் உள்ளனர்.  கன்னியாகுமரியைச் சேர்ந்த கழக தோழர் யுவான்ஸ் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸிடம் வழங்கினார். உடன் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் மற்றும் தோழர்கள் உள்ளனர்.





No comments:

Post a Comment