40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!


60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி கரூர் பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டத்தலைவர் குமாரசாமி தலைமையில், கரூர் மாவட்ட ஒன்றிய நகரபொறுப்பாளர்களிடம் விடுதலை சந்தாவுக்கான  புத்தகங்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் (03-07-2022)
****
இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் காஞ்சிரங்குடி கார்மேகம் விடுதலை சந்தா ரசீது புத்தகத்தை மண்டல தலைவர் கா.மா.சிகாமணியிடம் பெற்றுக்கொண்டு 10 சந்தாக்களை வாங்கி தருவதாக கூறினார். உடன்‌இராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்.முருகேசன், மாவட்ட செயலாளர் கோ.வ.அண்ணாரவி ஆகியோர் உள்ளனர்.
*******
60 ஆண்டுகால விடுதலைஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணிக்கான மன்னார்குடி  மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மண்டல செயலாளர் க. குருசாமி, மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.இரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் 10 விடுதலை சந்தாக்களுக்கான தொகையினை, பொதுக்குழு உறுப்பினர் நீடாமங்கலம் சிவஞானம் அவர்களுக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்களை, மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன் அவர்களுக்கு 50 சந்தாவுக்கான புத்தகங் களை, கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலுக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்களை. மன்னை நகரச் செயலாளர் இராமதாசுக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்களை, மாவட்ட பகுத்தறிவு ஆசிரிய ரணி தலைவர் தங்க.வீரமணிக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்களை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் கவுதமன், ஆசிரியர் கோபால், கோவி.அழகிரி ஆகியோருக்கு 50 சந்தாவுக் கான புத்தகங்களை, மாவட்ட துணைச் செயலாளர் புட்ப நாதன், செல்லையா, கோட்டூர் ஒன்றியத் தலைவர் மற்றும் விக்ரபாண்டியும் கவுதமன் பெருக வாழ்ந்தான் குமார், ஆகியோருக்கு 50 சந்தா வுக்கான புத்தகங்களை, மாவட்டத் துணைத் தலைவர் இன்பக்கடல், அவர்களுக்கு 20 சந்தாவுக்கான புத்தகங்களை, மன்னார்குடி நகரத் தலைவர் உத்தராபதி, போஸ், மனிகண்டன் அவர்களுக்கு 20 சந்தாவுக்கான புத்தகங்களை, மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தனுக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்களை, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசனுக்கு 50 சந்தாவுக் கான புத்தகங்களை, மன்னார்குடி மாவட்ட மேனாள் அமைப்பாளர் கைலை ஊமத்துரைக்கு 20 சந்தாவுக்கான புத்தகங்களை, மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.இரமே'§க்கு 50 சந்தாவுக்கான புத்தகங்களை, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சக்திவேலுக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்களை ஆசிரியர் காமராசுக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், நன்கொடை புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு மேலும் சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் (6.7.2022).
*******
விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 05-07- 2022 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் கழக மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 1000 விடுதலை சந்தாக்களை விரைந்து திரட்டுவதற்காக  கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார் ஆகியோர் கழகப் பொறுப்பாளர்களிடம் விடுதலை சந்தா புத்தககங்களை வழங்கினர். புத்தகங்கள் பெற்றுக் கொண்டோர் விவரம்: 1.மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் - 5 புத்தகம், 2. மாவட்ட அமைப்பாளர் புலவர் வை.இளவரசன் - 6 புத்தகம், 3. மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ் - 5 புத்தகம், 4. மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன் - 10 புத்தகம், 5. வேப்பூர் வட்டத்தலைவர் பி.பழனிச்சாமி, கழுதூர் ம.இளங்கோவன் - 5 புத்தகம், 6. மங்களூர் ஒன்றிய செயலாளர் சி.சுப்பிரமணியன் - 1 புத்தகம், 7. கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் த.தமிழ்ச்செல்வன் - 1 புத்தகம், 8. மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகமதுபஷீர் - 2 புத்தகம், 9. பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம் - 1 புத்தகம், 10. மாவட்ட இளைஞரணி செயலாளர் சே.பெரியார் மணி -2 புத்தகம், 11. விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் - 1 புத்தகம், 12 .மாவட்ட ப.க தலைவர் ஆசிரியர் இராசா - 2 புத்தகம், 13. கங்கை அமரன் - 1 புத்தகம்  - சந்தா புத்தகங்களை ஆர்வமுடன் பெற்றுக் கொண்டத் தோழர்கள் விரைந்து சந்தாக்களை வழங்குவதாக உறுதியளித்தனர்.
*****








No comments:

Post a Comment