40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

தமிழர் தலைவரிடம் சந்தாக்கள் வழங்கல்

தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்  இரா. வில்வநாதன்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து  குடும்ப சந்தாவாக 27 அரையாண்டு விடுதலை சந்தாக்களுக்கான  தொகையை வழங்கினார்.உடன்  தென்சென்னை மாவட்ட  தலைவரின் இணையர் வளர்மதி. தென்சென்னை மாவட்ட  செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து  குடும்ப சந்தாவாக 5 அரையாண்டு விடுதலை சந்தாவுக்கான  தொகையை வழங்கினார். (பெரியார் திடல்-21.07.2022). 

---------------------------------

விழுப்புரம் மாவட்டம் ,ஆரியூர் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.செகதீசன் அவர்களின் மகள் செ.திருமாமணி சார்பில், எ.மணிகண்டன், கே.தனசேகரன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, 113  அரையாண்டுகளுக்கான விடுதலை சந்தா தொகை ரூ.1,13,000 வழங்கி மகிழ்ந்தனர். (20.07.2022, பெரியார் திடல்) படம் 2: ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் அவர்கள் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை சந்தித்து 4 ஆண்டு விடுதலை சந்தா மற்றும் 2 அரையாண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.9,300 /- வழங்கினார்.  (20.07.2022, பெரியார் திடல்) படம் 3: விழுப்புரம் மாவட்டம் கா.நமச்சிவாயம்(ரயில்வே துறை பணியாளர்) மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியிடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர். படம் 4:  உளுந்தூர்பேட்டை ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்லமுத்து ஓராண்டு விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் இடம் வழங்கினார்.

வனத்துறை அமைச்சர் கா. இராமச்சந்திரன் அவர்கள் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு அய்ந்து ஆண்டுகளுக்கான சந்தா ஒன்றும் மற்றும் ஓராண்டுக்கான சந்தா ஒன்றும் வழங்கினார். குமரிமாவட்ட திமுக வர்த்தகர் அணி பொறுப்பாளர் இளஞ்செழியன்  விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.  உடன் குமரிமாவட்ட திராவிடர்கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் மாவீரன் எஸ். அலெக்சாண்டர்.  20.7.2022 அன்று புத்தகரம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல் வீரர்  லெனின் அன்பரசு அவர்களிடம் ஓராண்டு   விடுதலை சந்தா, கும்மிடிப்பூண்டி மாவட்டம் சார்பாக , புழல் த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட  தலைவர்), புழல் ஒன்றிய செயலாளர் உதயகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கலைஞர் கருணாநிதி நகர் எம். மதிமாறன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு அரையாண்டு சந்தா வழங்கினார்.
---------------------------------
கோவை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
கவுண்டம்பாளையம் பகுதியில் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் திராவிடமணியோடு  அ.மு.ராஜாவும் இணைந்து விடுதலை சந்தா திரட்டும் பணி நடைபெற்றது. கோவை வடவள்ளி பகுதியில் கே.முருகன் விடுதலை சந்தா, கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் விஸ்வநாதன் விடுதலை அரையாண்டு சந்தா, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள திமுக மன்றத்தில் சி.ஜெயசந்திரன் விடுதலை அரையாண்டு சந்தா, கோவை சிவானந்தகாலனி பகுதியில் தோழர் சா.ராசா, ரா.சந்திரா ஆகியோர் முன்னெடுப்பில் சம்பத் வீதியில் தளபதி பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் பெ.இராமசாமி அரையாண்டு சந்தா வழங்கினர்.
---------------------------------
தென்காசி, விருதுநகர், மதுரை புறநகர் மாவட்டங்களில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி
தென்காசி மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளர் சிவ பத்மநாபன்  10 ஓராண்டு விடுதலை சந்தா, தென்காசி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் அய்ந்து ஆறு மாத விடுதலை சந்தா, சுரண்டை திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் வே.செயபாலன் ஓராண்டு விடுதலை சந்தா, திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கீழப்பாவூர் அ.சவுந்தரபாண்டியன் ஓராண்டு விடுதலை சந்தா,  கழகப் பொதுக்குழு உறுப்பினர் கீழப்பாவூர் பி. பொன்ராஜ் இரண்டு ஆறு மாத சந்தா, நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் கீழப்பாவூர் அய்.இராமச் சந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா, கீழப்பாவூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலாளர்சீனித்துரை ஆறுமாத விடுதலை சந்தா, நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர் சு. இனியன் ஆறுமாத விடுதலை சந்தாக்களை மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.

தென்மாவட்ட பிரச்சார குழு செயலாளர் மேலமெஞ்ஞானபுரம்  சீ.டேவிட் செல்லதுரை எட்டு ஓராண்டு சந்தா,  கீழப்பாவூர் பேரூர் கழக திமுக செயலாளர் ஆர். ஜெகதீசன்ஆறுமாத விடுதலை சந்தா, ஆலங்குளம் நகர தலைவர் பெரியார் குமார் ஆறுமாத விடுதலை சந்தா, தென்காசி மாவட்டம் ஆலங்குலத்தில் சுயமரியாதை வீரர் ஆலடிப்பட்டி செந்தில்குமார் இரண்டு ஆறுமாத சந்தா, மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் அருப்புக்கோட்டை அழகர் ஆறுமாத விடுதலை சந்தா, மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் சி.பாண்டியன், ஆறுமாத விடுதலை சந்தா, மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன் ஆறுமாத விடுதலை சந்தாக்களை மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். 

பெரியார் ஆசிரியர் பயிற்சி மேனாள் மாணவர் தலைமயாசிரியர் குமார் 1 ஆண்டு விடுதலை சந்தாவினை பொதுக்குழு உறுப்பினர் புலவர் இரா.வேட்ராயனிடம் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் இ.மாதன், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் இர.கிருட்டினமூர்த்தி, விடுதலை வாசகர்வட்ட தலைவர் க.சின்னராஜ், நகர தலைவர் ஆசிரியர் ம.சுந்தரம் ஆகியோர் உள்ளனர்  புதுக்கோட்டை மாவட்ட கழக காப்பாளர் இர.புட்பநாதன் மறைவையொட்டி நடந்த படத் திறப்பு நிகழ்வின்போது அவரது நினைவைப் போற்றும் வகையில் இர.புட்பநாதனின் சகோதரர் சேவியர் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவை மாவட்ட தலைவர் அறிவொளியிடம் வழங்கினார்.  17.7.2022 அன்று திருச்சி தி.மு.க மாணவரணி மாவட்ட தலைவர் ந.கண்ணன் மற்றும் திராவிடர் தொழிலாளரணி சட்ட ஆலோசகர், தி.மு.க 19ஆவது வட்ட செயலாளர் நலங்கிள்ளி 10 அரையாண்டு விடுதலை சந்தாக்களை திருச்சி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.சங்கீதா, மாவட்ட மகளிர் பாசறை துணைத் தலைவர் கு.அமுதா, மகளிரணி துணைத் தலைவர் வசந்தி ஆகியோரிடம் வழங்கினர்.





No comments:

Post a Comment