இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் (அவியேஷன்) Junior Operator (Aviation) பணியில் 39 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தென்இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 28 இடங்களும், கருநாடகாவில் 6 இடங்களும், தெலங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பை பொது, இடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 26 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.23 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.78 ஆயிரமும் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறமை, உடல்தகுதி தேர்வு மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
இந்த பணிக்கு பொது, இடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.iocl.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
இந்த இணையதளத்தில் Careers என்பதை கிளிக் செய்து வேலைக்கான அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜூலை 29ஆம் தேதி கடைசி நாளாகும்.