120 அடியை எட்டிய மேட்டூர் அணை காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

120 அடியை எட்டிய மேட்டூர் அணை காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர், ஜூலை 17   மேட்டூர் அணை நடப்பாண்டில் முதல்முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோரங்களில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக கருநாட காவில் உள்ள அணைகள் நிரம் பியுள்ளன. கருநாடக அணை களில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி உபரி நீர் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் தது. அணையின் நீர்மட்டம் 15.7.2022 அன்று இரவு 8 மணி அளவில் 116.67 அடியை எட் டியது. அப்போது, அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 17,349 கனஅடி நீர் வந்து கொண்டி ருந்தது. டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வந்தது.

நீர்வரத்து தொடர்ந்து அதி கரித்து வந்ததால் நேற்று (16.7.2022) காலை 9.55 மணி அளவில், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நடப் பாண்டில், மேட்டூர் அணை முதல்முறையாக நிரம்பியுள்ளது. மேலும், அணையின் வரலாற்றில் 42ஆவது தடவையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

அணை நிரம்பியதையடுத்து, 16 கண் மதகுகள் பகுதியில், காவிரி அன்னைக்கு சிறப்பு வழி பாடு நடத்தி, உபரிநீர் திறக்கப் பட்டது. மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப்பொறியாளர் மதுசூ தனன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, அணை நீரில் மலர் தூவினர். அதேநேரத்தில் அணைக்கு நீர்வ ரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு 7.30 மணி அளவில் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட் டது. அணையின் மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக, விநா டிக்கு 23 ஆயிரம் கனஅடி வீத மும், 16 கண் மதகுகள் வழியாக, விநாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதமும் நீர் வெளியேற்றப்படு கிறது.

கால்வாய் பாசனத்துக்காக அணையில் இருந்து பாசன நீரை, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்படுகிறது. அணை நிரம்பிவிட்டதால், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. எனவே, காவிரிகரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. வருவாய், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, பொதுப் பணி ஆகிய துறைகளின் அதிகாரிகள் இணைந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment