நிலக்கரி பற்றாக்குறை என்ன காரணம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

நிலக்கரி பற்றாக்குறை என்ன காரணம்?

சென்னை, ஜூன் 4 நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று பொதுத்துறை மற்றும் பொது சேவைக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாகர் கோவிலை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை மற்றும் பொது சேவைக்கான மக்கள் ஆணையம் வெளியிட் டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்திக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு எடுத்து வேறுபயன்பாட்டுக்கு செலவிட் டுள்ளது. தவிர, உரத் தொழிற் சாலையில் நிதியை முதலீடு செய் யுமாறு கோல்இந்தியா நிறுவ னத்தை ஒன்றிய அரசு நிர்ப்பந் திக்கிறது.

மேலும் இந்த நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக முக்கிய பதவி யான தலைவர் மற்றம் மேலாண் இயக்குநர் பதவியை நிரப்புவ தில்லை. நிலக்கரி சுரங்க மேலா ளர்கள் தூய்மை இந்தியா இயக்கப் பணிகளை மேற்கொள்ள அனுப் பப்படுகின்றனர். இதனால் நிலக் கரி சுரங்கப் பணி தொய்வடைகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் உள்ள நிலையில், மின்சாரம் மற்றும் நிலக்கரி தேவையை முன்கூட்டியே அறிந்து, தேவையான போக்குவரத்து ஏற் பாடுகளை செய்து கொண்டுபோய் சேர்த்திருக்க வேண்டும்.

இவ்வாறு யூகிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. இப் பொறுப்பை நிறைவேற்றுவதில், ஒன்றிய அரசு தோல்வியடைந் துள்ளது. இதன் காரணமாக நிலக் கரி பற்றாக்குறை என்ற நெருக் கடியில் இந்தியாவை தள்ளியுள் ளது. இந்நிறுவனத்தின் நிதியும், அலுவலர்களும் மடைமாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால் 11 சதவீதம் உற்பத்தி அதிகரித் திருக்கும். இப்போது இருக்கக் கூடிய நிலக்கரி பற்றாக்குறை என்ற நெருக்கடிக்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் தவறான முடி வுகளே காரணம்.

இந்த சூழலில், தங்களுக்கு ஆதர வான நிறுவனத்தின் வெளிநாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். இப் போது மாநில அரசுகள் கட்டாய மாக மாதம்தோறும் அவர் களின் தேவையில் 10 சதவீதத்தை வெளி நாட்டில் இருந்துஇறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தித்து வரு கிறது. இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment