தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை கூட்ட வேண்டும் பிரதமருக்கு, தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை கூட்ட வேண்டும் பிரதமருக்கு, தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 21 தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மாநிலங்களுக்கு இடையிலான கவுன் சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமரை, மக்களவை உறுப் பினர் திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்  வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை வலியுறுத் தியிருப்பதை வரவேற்கிறோம். இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறோம். பிரதமராக மோடி பொறுப்பேற்றதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி அவரது தலைமையில் அக்கவுன்சிலின் 11ஆவது கூட்டம் டில்லியில் நடை பெற்றது.

இரண்டாவது முறையாக பிரதம ராக அவர் பொறுப்பேற்ற பிறகு ஒன்றிய அரசு நிறைவேற்றிவரும் பல சட்டங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், மாநில மக்களுக்கு தீங்கிழைப்பதாகவும் அமைந்துள்ளன என்பதையும், அந்த சட்ட மசோதாக்கள் போதுமான அளவில் விவாதிக்கப்பட வில்லை என்பதையும் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார். தமிழ்நாடு முதல மைச்சரின் வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்தக் கோரிக்கையை ஏற்று உட னடியாக மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண் டும் என பிரதமரை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்முயற்சிக்கு அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு நல்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment