இந்தியாவில் வாழ்பவர்களிடையே மரபணு ஆராய்ச்சியா? ராமச்சந்திர குகா உள்ளிட்ட அறிஞர்கள், எழுத்தாளர்கள் கூட்டாக கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

இந்தியாவில் வாழ்பவர்களிடையே மரபணு ஆராய்ச்சியா? ராமச்சந்திர குகா உள்ளிட்ட அறிஞர்கள், எழுத்தாளர்கள் கூட்டாக கண்டனம்

புதுடில்லி, ஜூன் 16 - இந்தியாவில் வாழும் மக்களின் இனத் தூய்மை மற்றும் மரபியல் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், புதிய மரபணு (DNA)  ஆராய்ச்சியை ஒன்றிய அரசு மேற்கொள் ளவிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு ஒன்றிய கலாச்சாரத்துறை செய லாளர் கோவிந்த் மோகன், பிரபல தொல் பொருள் ஆராய்ச்சியாளரும் பேராசிரிய ருமான வசந்த் ஷிண்டே மற்றும் லக்னோவில் உள்ள பழங்கால அறிவியல் கல்வி நிலை யத்தை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டார்.  அதைத்தொடர்ந்து பேட்டியளித்த பேரா சிரியர் வசந்த் ஷிண்டே, “மனிதர்களின் மரபணுக்கள் 10,000 ஆண்டு களில் எப்படி உருமாற்றம் அடைகின்றன.. ஒரு மரபணு வரிசையுடன் மற்றொரு மரபணு வரிசை எவ்வாறு  கலக்கிறது? என்பது தொடர் பாக ஆராய்ச்சி செய்ய இருக்கிறோம்” என்றார்.

மேலும் “இந்த  ஆராய்ச்சியை இந்திய மக்களின்  இனத்தூய்மையை கண்டறிவதற் கான முயற்சியாகவும் பார்க்கலாம்” என்று ஒன்றிய அரசின் திட்டத்தை பகிரங்கமாக் கினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கெனவே ஜாதிய மற்றும் மத அடிப்படை யிலான பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் என பல்வேறு சிக்கல்கள், மோதல்களில் இருக்கும் இந்திய சமூகத்தில், ‘இனத்தூய்மை’ கண்ட றியும் ஒன்றிய அரசின் திட்டம் புதிய ஏற்றத் தாழ்வுகள், பிரச்சினைகளுக்கே வழி வகுக் கும்.

மேலும் ஆபத்தான முடிவு என்றும் அறிவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் கண் டனம் தெரிவித்தனர்.  இதையடுத்து, “தங் களின் முன்மொழிவு மரபணு வரலாற்றை நிறுவுவதற்கும் இந்தியாவில் உள்ள இனங் களின் தூய்மையைக் கண்டுபிடிப்பதற்கும் எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல!” என்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. பெங்களூரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீ ஸின் துணைப் பேராசிரியரான வசந்த் ஷிண்டேவும், தனது பேட்டி திரிக்கப்பட்டு விட்டதாகவும், இனத்தூய்மை என்ற  வார்த் தையை ஒருபோதும் தான் பயன்படுத்த வில்லை என்றும் கூறினார். 

கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்

நாடு முழுவதும் உள்ள மரபணு அறிவிய லாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கல்வியா ளர்கள், எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற அரசு  மேனாள் உயர் அதிகாரிகள், சமூக செயற் பாட்டாளர்கள் 122 பேர், ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.  அதில், “இனத் தூய்மை குறித்த எந்த ஆய்வும் இப் போதைக்கு இல்லை என்பதோடு அல்லாமல், எப்போதும் அதனை நடத்தக் கூடாது” என்றும், “அதற்கான பகிரங்க மான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்” எனவும் வலியு றுத்தியுள்ளனர். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோ மெடிக்கல் ஜெனோமிக் நிறுவனத்தைச் சேர்ந்த மரபியல் வல்லுநர் பார்த்தா பி. மஜூம் தார், பரிணாம உயிரியலாளர்கள் அமிதாப்  ஜோஷி, தீபா ஆகாஷே மற்றும் ராகவேந்திர கடகர், இயற்பியலாளர்கள் இந்திராணி போஸ் மற்றும் சிறீகாந்த் சாஸ்திரி, உயிரியலாளர் சத்யஜித் மேயர், பெங்களூரு மனித மரபியல் மய்யத்தைச் சேர்ந்த வித்யானந்த் நஞ்சுண் டியா, அசோகா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எல்.எஸ். சசிதரா, சுற்றுச்சூழல் ஆர் வலர் லியோ சல்டான் ஹா; ஆர்வலர் அருணா ராய்; வரலாற்றா சிரியர் மற்றும் எழுத்தாளர் ராமச் சந்திர குஹா, எழுத்தாளர் மற்றும் பத்திரிகை யாளர் ராம்மனோகர் ரெட்டி; திரைப்பட ஆய்வு நிபுணர் இரா.பாஸ்கர்; மற்றும் சமூக மானுடவியலாளர் ஏ.ஆர். வாசவி, பெங்களூரு பன்னாட்டு கோட்பாட்டு அறிவியல் மய்யத்தைச் சேர்ந்த ராம கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கடிதத் தில் கையெழுத்திட்டுள்ளனர். 

கடித விவரம்

அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்ப தாவது: இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலோ ‘இனங்களின் தூய்மையை’ கண்டுபிடிப்பது மிகவும் கவ லைக்குரியது. அவ்வாறு செய்வ தற்கான திட்டம் அபத்தமானது மற்றும் ஆபத் தானது. ஏனெனில், ‘உயிரியல் இனங்கள்’ என்ற கருத்து நீண்ட காலத்திற்கு முன்பே ‘நிராகரிக்கப்பட்டு’ விட்டது.  எலும்பு அமைப்பு மற்றும் தோல் நிறம் போன்ற உடல் அம்சங்கள் மற்றும் நம்பிக்கை மற்றும் மதம் போன்ற சமூகப் பண்புகள் ஆகியவற்றின் அடிப் படையில் மனிதர்களை தனித்தனி குழுக் களாக வகைப் படுத்தும் முயற்சியின் ஒரு  பகுதியாகத்தான் ‘இனம்’ என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டது.  எனினும், தனிப்பட்ட உயிரியல் பரம்பரையை  உருவாக்கும் மரபணுக்களின் அடிப்படையில், எல்லா மனிதர்களும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என் பதைப் பொருட்படுத்தாமல், ஒரே ‘மரபணுக் குணத்தை’ பகிர்ந்து கொள்கிறார்கள். மனிதர்களின் இனரீதியான ஸ்டீரி யோடைப் நிராகரிக்கப்பட் டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எபோகல் பேப்பர் சுட்டிக்காட்டியபடி, பெரும்பா லான மரபணு அடிப்படையிலான வேறு பாடுகள் இனங்கள் என்று அழைக்கப் படுபவர்களுக்கு உள்ளேதான் நிகழ்கின்றன, இனங்களுக்கு இடையில் அல்ல.  அதாவது, “...மனித இனங்கள் மற் றும் மக்கள்தொகை ஆகியவை குறிப் பிடத்தக்க வகையில் ஒன்றுக்கொன்று ஒத்திருக்கின்றன. மாறாக, மனித மாறு பாட்டின் மிகப்பெரிய பகுதி இனங்களுக்கு இடையிலானதாக அல்லாமல், தனிநபர் களுக்கு இடையிலான வேறுபாடுகளால் மட்டுமே கணக்கிடப்படுகிறது. மேலும், ‘தூய்மை’ என்ற கருத்து அர்த்தமற்றதாக இருப்பதுடன், சில குழுக்கள் மற்றவர்களை விட குறைவான தூய்மையான அல்லது அதிக தூய்மையான என்ற ஏற்றத்தாழ்வு உணர்வைக் கொண்டுள் ளது. மனித வரலாற்றின் இது போன்ற கொடூர மான அநீதிக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

பல ஆண்டுகளாக, கலாச்சார அமைச் சகத்தின் கீழ் உள்ள இந்திய மானுடவியல் ஆய்வு உட்பட பல்வேறு இந்திய நிறு வனங்களில் பணிபுரியும் மரபியலாளர்கள் மற்றும் மானுடவியலாளர்கள், பழங்குடி சமூகங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு சமூகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தனி நபர்களின் விரிவான டிஎன்ஏ பகுப்பாய் வுகளை சிரமமின்றி மேற் கொண்டுள்ளனர். இன்று ஒவ்வொரு சமூகமும் பல மூதாதையர் சமூகங்களின் ஒரு கலவையான சமூகமாகவே உள்ளது. அதன் அடையாளங்களை சிறந்த முறையில் யூகிக்க முடியுமே இப்போதும் அவற்றை மிகவும் உறுதியாக கூறிவிட முடி யாது. கலாச்சார அமைச்சகத்தின் பரிசீல னையில் உள்ள திட்டத்தால் என்ன நன்மை எதிர்பார்க்கப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது ‘இனத் தூய்மை’ பற்றிய கேள்விகளை எழுப்புமானால், இந்தியர்களுக்கு இடையிலான ஒற்றுமை சீரழியும் என்பது மட்டும் உண்மை. எனவே, இந்தியாவில் கருத்தை புதுப்பிக்க எந்த முயற்சியும் இருக்கக்கூடாது. 

- இவ்வாறு கடிதத்தில் அவர்கள் குறிப் பிட்டு உள்ளனர்.


No comments:

Post a Comment