உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு கெடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு கெடு

புதுடில்லி, ஜூன் 17 'ஸ்விக்கி, சோமெட்டோ உள்ளிட்ட  உணவு வழங்கும்  நிறுவனங்கள், வாடிக்கை யாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான விரிவான அறிக்கையை, 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக முன்னணி இ-காமர்ஸ் உணவு வர்த்தக நிறுவனங்களுடன் நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோஹித் குமார் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

கடந்த 12 மாதங்களில் தேசிய நுகர்வோர் உதவிஎண் 1915இன் மூலம் ஸ்விக்கி மீது 3 ஆயிரத்து 631 புகார்களும், சோமெட்டோ மீது 2 ஆயிரத்து 828 புகார்களும் பெறப்பட்டுள்ளன. எனவே, இணைய வழி வாயிலாக உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தையும், அதை மேம்படுத்திய புதிய திட்டத்தையும், அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  நுகர்வோர் தரும் புகார்கள் மீது குறைகள் தீர்க்கப்படவில்லையென்ற சர்ச்சையைப் போக்கும்விதமாக ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.


No comments:

Post a Comment