கரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஒன்றிய அரசு அவசர ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஒன்றிய அரசு அவசர ஆலோசனை

புதுடில்லி, ஜூன்.23 கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  ஒன்றிய அரசு  நிபு ணர்களைக் கூட்டி அவசர ஆலோ சனை நடத்துகிறது.  ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வைரஸ் களால் தூண்டப்பட்ட கரோனா அலை மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களான பிஏ.2, பிஏ.2.38 ஆகியவைதான் இந்த எழுச்சியின் பின்னால் இருப்ப தாக தெரிய வந்துள்ளது. தற்போது மராட்டியம், கேரளா, டில்லி, கருநாடகம், தமிழ்நாடு, அரியானா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 

இந்த தொற்று பரவலை தடுக்க  ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று (23.6.2022) டில்லியில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டி உள்ளார். அவர் தலைமையில் நடக்கிற இந்த கூட்டத்தில் எய்ம்ஸ்  மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மய்யத்தின் இயக்குனர் சுஜீத் சிங் ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். ஒன்றிய சுகாதாரத்துறை செய லாளர் ராஜேஷ் பூஷண், உயிரிதொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, மருந்து துறை செயலாளர் அபர்ணா உள்ளிட்டோரும் பங்கேற் கிறார்கள். இதில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பதை தடுப்பதற்கென யுக்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 43 மாவட்டங்களில் வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஒன்றிய  அரசு ஆலோசனைகள் வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


No comments:

Post a Comment