உலக சதுரங்க போட்டியை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பிரக்ஞானந்தா நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

உலக சதுரங்க போட்டியை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பிரக்ஞானந்தா நன்றி

 காஞ்சிபுரம், ஜூன் 23 சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் 44வது ஒலிம் பியாட் உலக செஸ் போட்டியை நடத்தப் படுவதற்கு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா நான்றி தெரிவித்துள்ளார். உலக வாகையரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில், மாமல்ல புரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி  வரும் ஜூலை 28ம் துவங்கி ஆகஸ்ட் 10ம் தேதி  வரை நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட  சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில்,  காஞ்சிபுரத்திற்கு  வந்த  பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்தது. இப்போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக சதுரங்க போர்டு வாரியத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்ச ருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோன். மேலும், நான் சிறப்பாக பயிற்சி மேற் கொண்டு வருகிறேன். முழு திறமையையும்  வெளிப்படுத்தி வெற்றி பெறுவேன்’ என்றார்.

No comments:

Post a Comment