தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி அனைத்து ஜாதியினருக்கும் 69 சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி அனைத்து ஜாதியினருக்கும் 69 சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை!

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை தமிழ்நாடு அரசு அதன் அறநிலையத்துறை மூலம் - 15 ஆண்டு என்ற நீண்ட இடைவெளிக்குப் பின்னால் - துவக்கவிருப்ப தான செய்தி கேட்டு, மிகவும் மகிழ்ந்து பாராட்டி அதனை வரவேற்கிறோம்.

காரணம், ஜாதி- தீண்டாமை ஒழிப்பு என்ற 'திராவிட மாடல்' ஆட்சியில் சமத்துவபுரமாக நாடே திகழ வேண்டும் என்ற கொள்கைகளை நிறைவேற்ற - தந்தை பெரியார் விருப்பப்படியும், கொள்கைப் படியும் முந்தைய கலைஞர் ஆட்சியில் தொடங்கி நடத்தப்பெற்ற 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப் படையில்  அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் அதனை விரும்பும் அனைத்து  ஜாதி மாணவர்களை - ஆதி திராவிடர் உள்பட அனைவரையும் தேர்வு செய்து, ஆகமப் பயிற்சி போன்றவைகளைத் தருவதும், தொடர்ந்து ஏற்கெனவே நியமனங்கள் பெறாத பயிற்சி பெற்ற வர்களை அப்பொறுப்பில் நியமித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு - வழிகாட்டுதல்படி அனைத்துப் பெரிய கோவில்கள் உள்பட எல்லாவிடங்களிலும் இந்த அர்ச்சகர்கள் ஜாதி வேறுபாடு இன்றி, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது என்பது - "அனைவருக்கும் அனைத்தும்" என்ற சமூகநீதி அடிப்படையிலும், மனிதநேயத்துடனும் தேவையான காலத்தின் கட்டாயம்!

எந்த சலசலப்புக்கும் காது கொடுக்காமல் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு அரசையும், நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் பாராட்டுகிறோம். மற்ற கல்லூரிகள் போல்  தொடர்ச் சியாக இனி இது தமிழ்நாடு அரசால் நடத்தப்படல் வேண்டும்.

தமிழ் அர்ச்சனைக்காகவும் இவர்களைத் தயாரித்து - தனிப் பயிற்சி தருவதும் முக்கியமாகும்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

26.6.2022

No comments:

Post a Comment