ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு மத்தியில் தந்தைக்கு இறுதி நிகழ்வு செய்த 3 மகள்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 14, 2022

ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு மத்தியில் தந்தைக்கு இறுதி நிகழ்வு செய்த 3 மகள்கள்

அயோத்தி, ஜூன் 14 அயோத்தியில் இறந்த தந்தையின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதையை செய்த மூன்று மகள்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை அடுத்த மில்கிபூர் தெஹ்சில் பகுதியில் வசித்து வந்த  அவத் ராஜ் திவாரி என்பவர் புற்றுநோய் பாதிப்பால், மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜ் திவாரி இறந்தார். அவரது உடல் அயோத்திக்கு கொண்டு வரப் பட்டது. ராஜ் திவாரியின் மனைவி கடந்த சில ஆண்டு களுக்கு முன்பே இறந்து விட்டார். அதனால், இந்த இணையரின் மூன்று மகள்கள்தான் தங்களது தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டியிருந்தது. சமூகத்தில் ஆண் வாரிசுதான் சடங்குகள் செய்ய வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்கள் சிலர் கூறிய நிலையில், அதனை மறுத்து மூன்று மகள்களுமே தங் களது தந்தைக்கு இறுதி மரியாதை நடத்தினர். தங்களது தோள்களில் சுமந்து சென்றனர். சுடுகாடு வரை சென்று, அவர்களே இறுதி மரியாதையையும் செய்தனர். இவர்களின் செயலை சிலர் விமர்சித்தாலும் கூட, பெரும்பாலனோர் வரவேற்றனர். மேலும் "மகன்களுக்கு நிகரானவர்களே மகள்களும்" என்பதை இந்த மூன்று மகள்களும் நிரூபித்துள்ளதாக உறவினர்கள் கூறினர். ராஜ் திவாரியின் மூன்று மகள்களில் இருவருக்கு  திருமண மாகிவிட்டது; மூன்றாவது மகள் பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment