சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்வி: மதுரை அமைப்பு முயற்சியால் பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்வி: மதுரை அமைப்பு முயற்சியால் பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி

தண்டனைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்விச் சேவை அளிக்கும் கூட்டமைப்பு முயற்சியினால் இவ்வாண்டு பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குடும்பத் தகராறு போன்ற சில பிரச்சினைகளில் மனைவிகளைக் கொன்றது மற்றும் எதிர்பாராத வகையில் பிற கொலை நிகழ்வுகளில் சிக்கிய சிலர் ஆயுள் தண்டனை கைதிகளாக மத்திய சிறைகளில் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உயர் கல்வி வரை படிக்க வைத்து முன்னேற்ற பாதைக்கு அனுப்பும் பணியை மதுரையில் செயல்படும் 'உலக சமத்துவத்துக்கான கூட்டமைப்பு' செய்கிறது. இந்த அமைப்பின் நிறுவன தலைவராக கேஆர். ராஜா உள்ளார். இவர் ஏற்கெனவே பாளையங்கோட்டை சிறையில் மனநல ஆலோசகராக இருந்தவர். தற்போது, மதுரையில் வழக்குரைஞராக உள்ளார். இவரது முயற்சியால் கடந்த 2013 முதல் ஆயுள் தண்டனை கைதிகளின் பிள்ளைகள் நூற்றுக்கணக்கானோரை பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை படிக்க வைத்து சிறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளில் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.

தொடர்ந்து கல்வி சேவை புரியும் இவ்வமைப்பின் உதவியால் இவ்வாண்டு பிளஸ் 2 , 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்து, கல்லூரிகளில் சேர தயாராக இருப்பதாக அமைப்பின் நிறுவன தலைவர் கேஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment