தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்: அரசு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்: அரசு அனுமதி

சென்னை, ஜூன் 10 தமிழ் நாட்டில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைத் திருக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங் களில் பணியாற்று வோர் உள்ளிட்ட பல்வேறு பணி யாளர்கள் இரவு நேரத்தில் பணிமுடித்து வரும்போது உணவு கிடைக்காமலும், உரிய பாதுகாப்பின்மை காரணமாக வும் சிக்கல்களை அனுபவித்து வந்தார். தொழிலாளர் ஆணை யரின் பரிந்துரையை ஏற்று கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்ப தற்கான அரசாணை 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப் பட்டது.

இதனிடையே, கரோனா பரவல் காரணமாக 2020-ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், கரோனா பரவல் குறைந்ததும் பல்வேறு கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும், இரவு நேரத்தில் கடைகள், நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட வில்லை.

இந்நிலையில், கடைகள், நிறுவனங்களை 24 மணி நேர மும் திறந்து வைக்க 2019ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட 3 ஆண்டு அனுமதி, 8.6.2022 அன்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்த அனு மதியை மேலும் 3 ஆண்டு களுக்கு நீட்டித்து, தமிழக தொழிலாளர் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தர விட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசிதழில் அவர் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக மக்கள் நலன் கருதி, ஜூன் 5ஆம் தேதி முதல், 10 அதற்குமேல் பணியாளர் களைக் கொண்ட கடைகள், நிறுவனங்கள், 24 மணி நேரமும் இயங்க அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், விதிகளை தளர்த்தி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான நிபந்தனைகளையும் அறிவித் துள்ளார்.

அதன்படி, பணியாளர் ஒவ்வொருவருக்கும் சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும். பணியாளர்கள் பெயரை பதிவு செய்வதுடன், அனைவரின் பார்வையில் படும்வகையில் காட்சிப்படுத்த வேண்டும். பணியாளர்களின் ஊதியம், கூடுதல் பணி நேரத்துக்கான ஊதியம் ஆகியவற்றை அவர் களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். தினமும் 8 மணி நேரம், வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் யாரை யும் வேலை செய்ய பணிக்கக் கூடாது. கூடுதல் பணி நேரம் என்பது, தினமும் பத்தரை மணி நேரத்தையும், வாரத்துக்கு 57 மணி நேரத்தையும் தாண்டக் கூடாது. இதை மீறி யாரும் பணியாற்றுவது தெரிந்தால், உரிமையாளர் அல்லது மேலா ளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் ஊழியர்கள்

பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்குமேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவர் களிடம் இருந்து எழுத்து மூலம் சம்மதம் பெற்று, இரவு 8 முதல் காலை 6 மணிவரை பணியாற்ற அனுமதிக்கலாம். அதற்கான பாதுகாப்பை நிறுவனம் வழங்க வேண்டும். ‘ஷிப்ட்’ அடிப் படையில் பணி யாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி வழங்க வேண்டும். பணி யாளர்களுக் கான ஓய்வறை, கழிப்பறை, பாதுகாப்பு பெட் டக வசதிகள் வழங்க வேண்டும்.

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால், அது பற்றிய புகார்களை பெற குழுவை உரிமையாளர்கள் அமைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் கடை உரிமை யாளர்கள் அல்லது மேலாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இந்த உத்தரவு யாருக்கு பொருந்தும் என்று தொழிலா ளர் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பத்து அல்லது அதற்குமேல் பணியா ளர் களைக் கொண்ட உணவ கங் கள், கடை கள், நிறுவனங் களுக்கு இது பொருந்தும். டாஸ்மாக் மது பானக் கடைகள், சிறு கடைகள், தேநீர் கடைகள், சிறு உணவகங் களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது’’ என்றனர்

No comments:

Post a Comment