கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்

சென்னை, ஜூன் 21 அரசுப் பள்ளி களில் படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியான மாணவியரி டம் இருந்து சான்றிதழ்களை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.

 மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற் றப்பட்டு மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனடிப் படையில், 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது அய்.டிஅய்யில் சேர்ந்து படிக்கும் போது அவர்களுக்கு உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து,  கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும்  திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவி யரிடம் இருந்து சான்றிதழ்களை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை கல்லூரி முதல்வர்கள் பெற வேண்டும். முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண் டும். இந்த தகவல்கள் சமூகநலத் துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்ப தால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். சான்றிதழ்களை பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங் கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக் கப்படும் ஜூலை 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க ஏதுவாக, திட்டப் பணிகளை உயர்கல்வித்துறை துரிதப் படுத்தியுள்ளது. 


No comments:

Post a Comment