இயற்கையாக உருவாகும் பனிப்படிவத்தை Ôபனிலிங்கம்Õ என்று மதச்சாயம் பூசுகின்ற மூடத்தனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

இயற்கையாக உருவாகும் பனிப்படிவத்தை Ôபனிலிங்கம்Õ என்று மதச்சாயம் பூசுகின்ற மூடத்தனம்

புதுடில்லி, மே 11- இயற்கையாக குகைப் பகுதிகளில் உருவாகும் நீர்மப் படி வங்களை அறிவியலாளர் ஆய்ந்து ஸ்டாலக்டைட்(stalactite)  ஸ்டாலக்மைட் (stalactite)  என்று இருவகையாக பிரித்துள்ளனர்.

பனிப்பாறைகள் அல்லது ஸ்டா லக்மைட்,  ஸ்டாலக்டைட் பனித்தி வலைப்படிவுகள்

பருவகாலங்களில் அல்லது ஆண்டு முழுவதும் பல குகைகளில் பனிக்கட்டி படிவங்கள் கீழிறிந்து மேலாகவும் (ஸ்டாலக்மைட்), மேலிருந்து கீழாகவும் (ஸ்டாலக் டைட்) பனித்திவலைப்படிவங்க ளாக உருவாகின்றன. இதனை அறிவியலாளர்கள் ஆய்ந்து தெளிந்து உரிய ஆதாரப்பூர்வ தகவல்களுடன் அறிவிக்கிறார்கள்.

பனித்திவலைப் படிவுகள் என் பது குகை போன்ற பகுதிகளில் குகைக்கு வெளியே இருந்து தண் ணீர் கசிவு ஏற்பட்டு குகைக்குள் செல்கையில், குகையின் தட்ப வெப் பத்திற்கேற்ப பனிக்கட்டி அல்லது கசிவு நீர் நீராவியாக மாறி கீழேயி ருந்து மேல் நோக்கி பனிப்புற்று போல் உருவாகும்போது பனி ஸ்டா லக்மைட் என்று அழைக்கப்படு கின்றது. குகைக்கு மேற்பரப்பி லிருந்து குகைக்குள் ஊடுருவும் நீர்க்கசிவானது, குகையின் வெப்ப நிலை உறைநிலைக்கு கீழே இருக் கும்போது, பனிக்கட்டிநீரானது தரையில் சேகரமாகி பனிக்கட்டிநீர் இறுகி புற்றுபோல் உருவாகிறது. குகையின் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப குகைக்குள் கசியும் பனி நீராவியாகி நேரடியாகப் படிவதாலும் பனித் திவலைப் படிவுகள் உருவாகின்றன.  கீழிருந்து மேல்நோக்கி புற்று போன்று உருவாகின்ற பனித் திவ லைப்படிவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மணி நேரங் களில், நாள்களில், வாரங்களில் உரு வாகி விடுகின்றன.  சூடான காற்று குகையின் கூரைப்பகுதிக்கு நகர்வ தால் உறைநிலையைவிட அங்கு வெப்பநிலை உயர்ந்து விடுகிறது. அதனால், 

மேலிருந்து கீழ் நோக்கி உருவா கின்ற ஸ்டாலக்டைட் எனப்படும் பனிக்கட்டி விழுதுப் பாறைகளை விட பனிக்கட்டி புற்றுப் பாறைகள் பரவலாக காணப்படுகின்றன.

பல்வேறு படிவங்கள்

இதேபோன்று எரிமலைக் குழம்பின் படிவங்கள், குகைகனிம படிவங்களும் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்முகாஷ்மீரில் உள்ள அமர் நாத்குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனித்திவலைப்படி வத்தை Ôபனிலிங்கம்Õ என்று மத அடையாளப்படுத்தி, அதனைக் காண பக்தர்கள் Ôஅமர்நாத் யாத்திரைÕ எனும் பெயரில் ஆண்டுதோறும் அப்பகுதிக்கு செல்கின்றனர்.

இயற்கையான ஒரு நிகழ்வை அறிவியல் முறைப்படி விளக்கத் தயாராக இல்லாமல், மதச்சாயத் தைப் பூசிவிட்டு மக்களை அறியா மையில் இருளில் வைத்து, அவர்க ளின் காலத்தையும், பொருளையும் சுரண்டும் போக்கு இருந்து வருகிறது.

அமர்நாத் பனி லிங்கம் என்று கூறிக்கொண்டு அதற்காகவே அமர் நாத் யாத்திரை எனும் பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் பக்தர்களை திரட்டுகின்ற னர்.

கரோன தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடை கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அதற்கான முன் பதிவும் தொடங்கிவிட்டது. 13 வயதுக்கு மேற்பட்டோர், 75 வயதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

தற்போது முன்பதிவு தொடங்கி 26 நாட்கள் முடிந்த நிலையில் 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள னர். கடந்த 2019ஆம் ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிடும்போது முதல் 26 நாட்களில் பதிவானோர் எண் ணிக்கை 246 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து ஜம்முகாஷ்மீர் அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ""கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமர்நாத் பனிலிங்க தரிசனத் துக்கு அனுமதி கிடைத்திருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் 6 லட்சம் பக்தர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க் கிறோம்" என்று தெரிவித்தார்.

அறிவியல் மனப்பான்மையை மக்களிடத்தில் வளர்க்கச்செய்ய வேண்டிய மதசார்பற்ற அரசுகள் மக்களிடம் அறியாமையைப் புகுத்தி, பக்தி சுற்றுலா என்கிற பெயரில் அமர்நாத் பயணத்தை ஊக்குவித்து வருவதுதான் வேதனையான ஒன் றாகும்.

லிங்கம்குறித்து விளக்கம் புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது. அது வும் அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் பொருந்தாதது.

No comments:

Post a Comment