வடகொரியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை மருந்து வழங்கலில் இராணுவ மருத்துவக்குழு அதிபர் கிம் ஜாங் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

வடகொரியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை மருந்து வழங்கலில் இராணுவ மருத்துவக்குழு அதிபர் கிம் ஜாங் உத்தரவு

பியாங்யாங்,மே17- பன்னாட்ட ளவில் கரோனா தொற்று பரவிய போதிலும், வட கொரியா நாட்டில்  மட் டும் கடந்த 2 ஆண்டுகளுக் கும் மேலாக கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வந்தது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, மக்களைத் தனிமைப்படுத்தும் நட வடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட் டது. 

இந்நிலையில், கடந்த 12.5.2022 அன்று கரோனா தொற்று பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக அந்நாடு வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’தொற்று உறுதிசெய்யப்பட்டது. அப்போதிருந்து காய்ச் சல் பாதிப்பும், உயிரிழப்பு களும் நாள்தோறும் அதி கரித்து வருகின்றன.

கரோனா தொற்று பாதிப்பால் வடகொரியா வில் நேற்று (16.5.2022) மேலும் 8 பேர் மரணம டைந்தார்கள். இதைய டுத்து, கரோனா தொற் றின் காரணமாக வட கொரியாவில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. ஒரே நாளில், 3லட்சத்து 92 ஆயிரத்து 920பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட் டது. இதுவரை 12லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறிக ளால் பாதிக்கப்பட்டுள்ள னர். காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உயிரிழப்புகளில் எத்தனை பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வட கொரியா இதுவரை அறி விக்கவில்லை.

இந்நிலையில், தனதுகட்சியின் அரசியல் விவகாரகுழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் கலந்து கொண்டார். அப்போது, அவர் அதிகாரிகளை கடு மையாக சாடினார்.

அவர்பேசியதாவது:-

அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந் தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந் தகங்கள் 24மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவ கார குழு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால் அந்த உத்த ரவை சுகாதார அதிகாரி கள் பின்பற்றவில்லை.அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண் டனர். கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம் பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது இராணு வத்தில் உள்ள மருத்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்து கள் வினியோகத்தை கவ னித்துக்கொள்ள வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment