தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் சதியை கண்டித்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் சதியை கண்டித்து

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருச்சி, மே 26- தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் சதியை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் 24.5.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருச்சி

திருச்சியில் 24.5.2022 அன்று காலை 10 மணியளவில் ராமகிருஷ்ணா திரையரங்கம் அருகில் கண்டன ஆர்ப் பாட்டம்  திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மண்டல மகளிரணி செயலாளர் சோ.கிரேசி, மாவட்ட ப.க. செயலாளர் மலர்மன்னன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மகாமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, மாணவர் கழகம் அஜிதன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.ராஜசேகர், மாநகர தலைவர் துரைசாமி, மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் சாந்தி, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் வசந்தி, மணப்பாறை ஒன்றிய தலைவர் பாலமுருகன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர், கல் பாக்கம் ராமச்சந்திரன், சிறீரங்கம் நகரத் தலைவர் சா.கண்ணன், செயலாளர் முருகன், திருவெறும்பூர் இளங்கோவன், திரு வெறும்பூர் ஒன்றிய தலைவர் வ.மாரியப்பன், செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், பெல் ஆறுமுகம், அசோக்குமார், ஆண்டி ராஜ், மணப்பாறை நகரச் செயலாளர் ரமேஷ், சுரேந்திரன், பீமநகர் பகுதி செயலாளர் முபாரக்அலி, நேதாஜி, காட்டூர் சங்கிலிமுத்து, ராஜேந்திரன், விஜய்யோகானந்த், சிறீரங்கம் அண்ணாதுரை, ஜெயில்பேட்டை சபீதா, அறவானூர் மு.பிரவீன்குமார், அல்லித்துறை கருப்பு கோகுல், சோமரசம் பேட்டை திருஞானம், போஜர் பன்னீர்செல்வம், பொன்றுசாமி, காட்டூர் பாலசுப்ரமணி, தீரன்நகர் கபிலன், நல்லசிவம், கோவிந்தன் பெரியார் பிஞ்சுகள் சத்தியா, கவிபிரியா, ரகு, நெல்சன் மாலதி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா நன்றி கூறினார்.  


மதுரை

வங்கித் தேர்வில் தமிழுக்கு இடம் இல்லையா? தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 24 /5/ 2022 செவ்வாய்க் கிழமை காலை மதுரை தமிழக எண்ணெய் பலகாரம் கடை அருகில் நடைபெற்றது. பேக்கரி கண்ணன், மாவட்ட இளை ஞர் அணி செயலாளர் ச.வேல்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ,முன்னிலையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு ஆர்ப்பாட்ட நிறைவுரை நிகழ்த்தினார்.

தே எடிசன் ராசா,தென்மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர். மற்றும்  சுப முருகானந்தம்,மாவட்டச் செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோரும் கருத் துரை வழங்கினார் . ந.முருகேசன், மதுரை மண்டல செயலாளர் .மற்றும் பொ.பவுன்ராஜ், மதுரை மாவட்ட துணை தலைவர் இரா.லீ.சுரேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் சோ.ராமச் சந்திரன், மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்.மற்றும் க.நாகராணி மகளிரணி அமைப்பாளர். பா.காசி பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயலாளர், நா. மணிகண்டன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்  சோ. சுப்பையா பகுதி செயலாளர், ஆட்டோ செல்வம் பகுதி செயலாளர், புதூர் பாக்கியம், போட்டோ ராதா, தனுஷ்கோடி கோரா, மு.கனி, மாரிமுத்து, புதுமை இலக்கிய தென்றல் பேரவை.கவிஞர் மீனாட்சி சுந்தரம், செல்ல கிருஷ்ணன், சண்முகம் செல்லூர், முரளி, பால்ராஜ் கேசவன், எல்அய்சி மோதிலால் ஆகி யோரும் கலந்து கொண்டனர். டார்வின் செந்தில் நன்றியுரை கூறி ஆர்பாட்டம் நிறைவுற்றது.

செங்கல்பட்டு

24/05/22 செவ்வாய் மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார் சிலை அருகில் ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

திண்டுக்கல் 

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில், கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சக்தி சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டியன்(நிபி), மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் க. திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 திராவிடர் கழக திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், நகர செயலாளர் த.கருணாநிதி, இரா.நாராயணன் தி.தொ.க. பேரவைத் தலைவர் அ.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

மண்டல தலைவர் மு.நாகராஜன், சி.மாரியப்பன், இரா. ஜெயப்பிரகாஷ், மாணிக்கம்,  சின்னப்பர், பாண்டி, சிதம்பரம், காஞ்சித்துரை பெரியார் சுந்தர், அஜித், பாலமுருகன், ஜெக நாதன், கீர்த்தீஸ்வரன்,  வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில், அறிஞர் அண்ணா சிலை அருகில், 24.5.2022 செவ்வாய் மாலை 6 மணிக்கு, வங்கிப் பணிகளில் தமிழ், தமிழர் புறக்கணிப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கழக இளை ஞரணி மண்டலச் செயலாளர் இரா.அழகர் தலைமையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்குப் பின் சிபிஅய் நகரச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட ப.க. அமைப் பாளரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், சிபிஅய் வடக்கு ஒன்றியச் செயலாளர் பால முருகன், மாவட்ட தி.க. செயலாளர் விடுதலை தி.ஆதவன், சிபிஅய் தோழர் கே.எஸ்.காதர்மைதீன், மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட ப.க. புரவலர் ந.ஆனந்தம், பொதுக்குழு உறுப் பினர் வெ.புகழேந்தி, மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முக சுந்தரம், அருப்புக்கோட்டை கவிஞர் நா.மா.முத்து, நகர கழக செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், பொ.கணேசன், தோழர் தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்

கோபிசெட்டிப்பாளையம்

தமிழ்நாட்டில் வங்கி தேர்வில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் 24:05:2022 மாலை 5:00 மணிக்கு மா.சூர்யா (மாணவர் கழக தலைவர் கோபி மாவட்டம்) தலைமையில் நடைபெற்றது.

ஆ.பிரபு.(கோபி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) வரவேற்றார், மண்டல இளைஞரணிச் செயலாளர் ப.வெற்றி வேல் தொடக்கவுரையாற்றினார், கோபி மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், கோபி மாவட்ட செயலாளர், வழக்குரைஞர் மு.சென்னியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். 

மாவட்ட கழக காப்பாளர் இரா.சீனிவாசன், நகர தலைவர் ஆனந்தன், செ.பிரசாந்த் குமார் (கோபி மாவட்ட இளைஞரணி செயலாளர்), அ.அஜித்குமார் (கோபி மாவட்ட மாணவர் கழக செயலாளர்), ப.திலகவதி (கோபி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் த.எழிலரசு (கோபி மாவட்ட மாணவர் கழக செயலாளர்) நன்றி கூறினார்.

நாகர்கோவில்

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய  அரசின் சதியைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி மாணவரணி மகளிரணி சார்பாக  நாகர்கோயில் வடசேரி அண்ணா சிலை முன்பாக போராட்டம் எழுச்சிடன் நடைபெற்றது

மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. இராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிர மணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ்,   மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ம.தயாளன், மா.மணி,பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு,   இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன்; மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆர். சதாசிவன், மதிமுக மாவட்ட செயலாளர் எஸ். வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சு.இசக்கி முத்து, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்  எட்வின் பிரைட், விசிக மாணவரணி செயலாளர் சா.ஜெகன், சமூக நீதிக்கான மாணவர் அமைப்பு நிர்வாகி ஆரிப் ஆகியோர் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து கண்டன உரையாற்றினர்.  மாவட்ட மகளிரணி தலைவர் சு. இந்திரா மணி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சு.இராஜசேகர், மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா. கோகுல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலர் குமாரதாஸ்,  பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது, தோழர்கள் ஜெய்சங்கர், யுவான்ஸ், பி.கென்னடி, ம.செல்வராசு, சியாமளா, திராவிட இயக்க பற்றாளர் விஷ்ணு, திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆன்டனி ராஜ்,தமிழ் மதி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

கோவை

தமிழ்நாடு இளைஞர்களின் வேலை பறிக்கும் ஒன்றிய அரசின் சதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை 24.05.2022 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி அளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில்  திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் , மு.இராகுலன் தலைமையில் நடைபெற்றது.

மாணவர் கழக மண்டல் செயலாளர் வெ.யாழினி, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு. தமிழ்செல்வம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கு. தேவிகா, மாணவர் கழக மாவட்ட செயலாளர் த.க.கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மண்டல் செயலாளர் ச.சிற்றரசு ஆர்ப்பாட்டம் நோக்கம் குறித்து தொடக்க உரை ஆற்றினார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல செயலாளர் சுசி கலையரசன் உரையாற்றினார்.

கழக சொற்பொழிவாளர் புலியகுளம் க.வீரமணி, ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படு வதை சுட்டி காட்டி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மிக எழுச்சி யுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர், கோவை மாவட்ட செயலாளர். தி.க.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ் செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் தரும வீரமணி, மாவட்ட துணை செயலாளர்.தி.க.காளிமுத்து, மாநகர அமைப் பாளர் மே.ப. ரங்கசாமி, தொழிலாளர் அணி மாவட்ட செயலா ளர் வெங்கடாசலம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பெ.சின்னுச்சாமி, பழ அன்பரசு, குனிசை பகுதி செயலாளர் வே.தமிழ்முரசு,எட்டிமடை மருதமுத்து, போத்தனூர் வெங்க டேஷ், முத்துமலையப்பன், ஆட்டோ சக்தி, ஆறுச்சாமி கணபதி காமராஜ், கணபதி பாசா, வ.ராஜேஸ்வரி, செ. தன லட்சுமி, செ.இனியா, மாணவர் கழக மாவட்ட துணை தலைவர் ரா.வின்சென்ட், மற்றும் மாணவர் கழக தோழர் ஆ.அருன், செ.மதியரசு, க.சி.நியூட்டன், கா.பிரபாகரன், இராசி பிரபாகரன், இலைக்கடை செல்வம், வடக்கு பகுதி செயலாளர் கவி கிருஷ்ணன், கிழக்கு பகுதி செயலாளர் இல.கிருஷ்ண மூர்த்தி, புலியகுளம் தர்மலிங்கம், எம்.இரமேசு, முருகானந்தம், இர.முத்துகணேசன், பொள்ளாச்சி செழியன், ஜீடி நினைவு பெரியார் படிப்பகம் காப்பாளர் அ.மு.ராஜா மற்றும் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை தோழர்கள் மற்றும் விசிக தோழர்கள் குறிச்சி பகுதி செயலாளர் அந்தோனி அன்பரசு , தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் முகமதுஅலி, குறிச்சி அருண், எம்.அய்.செக்கீர், விசிக மகளிர் தோழர் சித்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை - திருமங்கலம்

ஒன்றிய அரசு பணிகளில் வடவர் ஆதிக்கத்தை எதிர்த்து 24.5.2022 அன்று மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக திருமங்கலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், தலைமை, பா.முத்துக்கருப்பன் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர், முன்னிலை, பு.கணேசன் இளை ஞரணி செயலாளர், ஜெ. பாலா இளைஞரணி அமைப்பாளர், ச.கலைச்செல்வி மகளிர் பாசறை அமைப்பாளர், கண்டன உரை, கா. சிவகுருநாதன் மண்டல தலைவர், த. ம. எரிமலை மதுரை புறநகர் மாவட்ட செயலாளர், ரோ. கணேசன் மாவட்ட அமைப்பாளர், அழ. சிங்கராசன் மாவட்ட து. தலைவர், சி.பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர், மு.சண்முகசுந்தரம் நகர தலைவர், ச.கமல் திருப்பரங்குன்றம் அமைப்பாளர், மாணவர் கழகத் தோழர்கள்: ச. மருதுபாண்டி, ம.தருன்குமார்,ச.நிசாந் தினி, மகளிரணி லட்சுமி, பிரியா மற்றும் தோழமைக் கட்சி பொறுப்பாளர்கள் அனிதா பால்ராசு மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர், ஓ. சுப்புக்காளை இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர், எழுமலை தவமணி மதிமுக மற்றும் அனைத்துக் கட்சி தோழர்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

ஈரோடு

வங்கித் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம்,மகளிரணி சார்பில் ஈரோடு சூரமாபட்டி நால் ரோட்டில் 24:05:2022 காலை 10:30 மணிக்கு ஈரோடு மண்டல இளைஞரணி தலைவர் ப.வெற்றிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் கண்டன உரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக மாவட்ட தலைவர் கு.சிற்றரசு,மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், கோ.பாலகிருஷ்ணன், கோ.திருநாவுக்கரசு, வீ.தேவராஜ் (மாநகர செயலாளர்), ப.சத்தியமூர்த்தி, பி.என்.எம்.பெரியசாமி(மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), து.நல்லசிவம்(பொதுக்குழு உறுப்பினர்), தே.காமராஜ்(மாவட்ட தொழிலாளரணி செயலாளர்), க‌.மணிகண்டன் (அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர்),ஒரிச்சேரி.தே.தேவேந்திரன், இராஜேந்திர பிரபு(அகில உலக மக்கள் உரிமைகள்  நலச்சங்க நிறுவனத் தலைவர்),சீனு.மதிவாணன்(பெரியார் புத்தக கடை),அ.தமிழ்குமரன் (திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர்), அ.பாண்டியன்(திமுக), சிவசுப்பிரணி யன் (தமிழக விவசாயிகள் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், சா.ஜெபராஜ் செல்லத்ரைதுரை நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் ஒன்றிய அர சின் வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் கட்டாயமில்லை என்ப தைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாண வர் கழகம், மகளிர் பாசறையின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் 24.5.2022 காலை 10.30மணியளவில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.யோகராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் மு.அறி வொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் அ.சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மேலும் மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப் பையா, மாவட்டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன், நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர் ரெ.மு.தரும ராசு, இளைஞரணி வெ.ஆசைத்தம்பி, பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி,  நகர தி.க. ப.சேகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் க.ஆறுமுகம், ம.மு.கண்ணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ.மனோகரன், நகர இளைஞரணிச் செயலாளர் பூ.சி.இளங்கோ, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சா.இரா.நிலவன், தஞ்சை மாவட்ட மாணவர் கழகத் துணைத் தலைவர் ச.சிந்தனைஅரசு, மாணவர் கழகத் கலைராசு, மகளிரணி ச.வெள்ளையம்மாள், மேகலா, பானுமதி, புதுக்கோட்டை மாரிமுத்து, மாங்கோட்டை மாணவர் கழகத் ஆ.அழகர், பொன்னமராவதி பகுத்தறிவாளர் கழகம் மு.மகேசுவரன், மாங்கோட்டை பிரவீன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

இலால்குடி

இலால்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தே.வால்டர், மாவட்டசெயலாளர் ஆ.அங்கமுத்து, இலால்குடி ஒன்றியசெயலாளர் பிச்சைமணி, முரளிதரன், மணச்சநல்லூர் உடுக்கையடி அட்டலிங்கம், ஆசிரியர்முத்து சாமி, மணச்சநல்லூர் நகர தலைவர் பாலச்சந்தர், நொச்சியம் பாலு, மகளிர்பாசறை அரங்கநாயகியம்மாள், திருவெள்ளறை ஆசைத்தம்பி, பூவாளுர் நகர தலைவர் ஜான்பிரிட்டோ, பகுத் தறிவாளர் கழகம் ஈழத்தனியரசு, வாளடி கழகத் தோழர்கள் புள்ளம்பாடி ஒன்றிய பெருவளப்பூர் மும்பை சித்தார்த்தன், புள்ளம்பாடி ஒன்றியசெயலாளர் மு.திருநாவுக்கரசு, கவிஞர் புரட்சிபாடகர் கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment