சில வரிகளில் அறிவியல் செய்திகள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

சில வரிகளில் அறிவியல் செய்திகள்...

காற்றில் கலந்த பேரோசை!

பூமியில் எழும் பேரொலிகளும் ஆற்றல்கள் தான். அவை, வானளாவிய அளவுக்குப் போவதும் நமக்குத் தெரிந்தது தான். 

ஆனால், தற்போது, அத்தகைய பேரோசைகள் வான் வெளியில் ஒரு வழித்தடத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரிய பலூன்களை மேக மண்டலம் வரை பறக்கவிட்டு தட்பவெப்ப நிலையை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் இத்தகைய ஒலி வழித் தடத்தை கண்டறிந்துள்ளனர். வாசிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, இத்தகைய வான் ஒலித்தடங்கள் இருப்பதை ஏறக்குறைய உறுதியாகச் சொல்ல முடியும். என தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகப்போரின்போது, கடலடியில் இதுபோன்ற ஒலிகள் பயணிக்கும் பாதைகள் இருப்பது ஆராய்ச்சிகள் வாயிலாக தெரிய வந்ததுகுறிப்பிடத்தக்கது.

கணிக்க முடியாத நாய் குணம்!

பல நாய் இனங்கள் இன்று உருவாகிவிட்டன. கூடவே, ஒவ்வொரு நாய் இனத்திற்கும் தனிப்பட்ட ஆளுமைகள் குணங்கள் இருப்பதான கருத்துகளும் உருவாகிவிட்டன.

ஆனால், அதெல்லாம் உண்மையா? உண்மை அல்ல என்கிறது 18 ஆயிரம் நாய்களை வைத்து செய்யப்பட்ட பெரிய ஆராய்ச்சி.நாய்களின் குணாதிசயம், அதன் பெற்றோரிடம் இருந்து மரபணு மற்றும் வளர்ப்பின் வாயிலாக ஓரளவு பெறப்படும்.

என்றாலும், குறிப்பிட்ட நாய் வகை என்றால் விசுவாசமானவை, சில வகை மிகவும் மூர்க்கமானவை, என்பது போன்ற கருத்துகள் உண்மையானவை அல்ல என மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர்.

மக்காச் சோள நன்மை

அல்சைமர்ஸ் நோய் வந்தால் நினைவாற்றல் பெருமளவு பாதிக்கப்படும். இதனால் முதியவர்களுக்கும், அவர்களை பார்த்துக்கொள்வோருக்கும் பெரிய சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் சில கெடுதல் விளைவிக்கும் புரதங்கள் மூளையில் தங்குவதுதான். இந்த புரதங்களே நினைவாற்றலை பெருமளவு பாதிக்கின்றன. எனவே, இதை நீக்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.அண்மையில், மக்காச் சோளத்தில் உள்ள ஒரு வகை புரதம், அல்சைமர்ஸ் நோய் மூளையில் உண்டாக்கும் நச்சுகளை விலக்கி, நினைவாற்றலை கூட்டுவதாக அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எலி சோதனைகளில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் மனித சோதனைகளை துவங்கவிஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

மூளைத் திறனைக் குறைக்கும் கோவிட்- 19

கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெடுநாள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியோருக்கு கடுமையான மூளை பாதிப்புகள்ஏற்பட்டிருப்பதை பல ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. 

அண்மையில் லண்டன் இம்பீரியல் கல்லுரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகவிஞ்ஞானிகள், கோவிட்-19 பாதித்தோரிடையே மிகப் பெரிய ஆய்வை மேற்கொண்டனர். அந்தஆய்வின்படி, அதிகம் பாதிப்படைந்தோரின் மூளைச் செயல்திறன் வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின்,இயல்பு வயதைவிட 20 ஆண்டுகள் கூடுதல் வயதானால் மூளையில் என்ன வித திறன் இழப்பு இருக்குமோ அந்த அளவு திறன் குறைந்துள்ளதாக அந்த ஆய்வுதெரிவிக்கிறது.


No comments:

Post a Comment