மெட்ரோ ரயில் திட்டம் அய்ந்து வழித்தடங்களின் வரைபடம் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

மெட்ரோ ரயில் திட்டம் அய்ந்து வழித்தடங்களின் வரைபடம் வெளியீடு

சென்னை, மே 28- சென்னை யில் மெட்ரோ ரயில் திட் டம் செயல்படுத்தப்படும் 5 வழித் தடங்களின் முழுமையான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப் பட்டது. தொடக்கத்தில் ஆலந்தூர்-கோயம்பேடு இடையே செயல்படுத்தப் பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது விம்கோ நகர் பணிமனை-விமான நிலையம், சென்னை சென்ட்ரல்-பரங்கிமலை இடையேயும் இயக்கப் பட்டு வருகிறது.

இந்த இருவழிப் பாதையை இணைக்கும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரயில் நிலையங்கள் திகழ்கின் றன. மேலும், இந்த இரு வழி தடத்திலும் 40 ரயில் நிலையங்கள் உள்ளன. 3ஆவது வழித்தடமாக மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையேயும், 4ஆவது வழித்தடமாக மாதவரம்-சோழிங்க நல்லூர் இடையேயும், 5ஆவது வழித்தடமாக பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையேயும் மெட்ரோ ரயில் பாதை கள் அமைக்கப்படுகின்றன.

மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித் தடத்தில் 50 ரயில் நிலையங்களும், மாதவரம்-சோழிங்கநல் லூர் இடையே 42 ரயில் நிலையங்களும், பூந்த மல்லி-கலங்கரை விளக்கம் இடையே 30 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில்களில் தற்போது தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், 2ஆம் கட்டமாக ரூ.61,843 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 2026ஆம் ஆண்டுக்குள் இப்பணி களை முடிக்க திட்ட மி டப்பட்டுள்ளது.இப் பணிகள் நிறைவடைந் தால் 5 வழித்தடங்களிலும் 173 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக் கப்படும். இந்நிலையில், 5 வழித் தடங்களின் முழு வரைபடம் வெளியிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment