ஜப்பான் சென்றாலும் தொடரும் பிரதமர் மோடியின் ஹிந்தி மொழி வெறி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

ஜப்பான் சென்றாலும் தொடரும் பிரதமர் மோடியின் ஹிந்தி மொழி வெறி!

புதுடில்லி, மே 25- ஆர்.எஸ்.எஸ். வழியில் பாஜக அரசை அமைத் துள்ள மோடி, ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதில் தீவிரம் காட்டிவருகின்ற தகவல் அவ்வப் போது வெளிச்சமிட்டு வருகின்றன.

ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றாலும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையின்படி ஹிந்தி மொழி வெறியுடன் நடந்துகொண்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பா னில் குவாட் தலைவர்கள் மாநாட் டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு மழலைகளைக்கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜப்பான் தலைநகர் டோக்கி யோவைச் சென்றடைந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இது போன்ற வரவேற்புகளின்போது பல்வேறு நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்லும்போது, அந்த நாட்டில் வசிக்கும் இந்திய வம்சா வளியினர் என்கிற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டுவதும், அந்தக் கூட்டத்திலிருந்து மோடி மோடி என்று முழக்கங்கள் ஒலிப்பதும் திட்டமிட்ட ஏற்பாடாக நடந்து வருகிறது.

அதேபோன்று ஜப்பானில் பிரதமரை வரவேற்க இந்திய வம்சாவளியினர், அவர் தங்கும் விடு தியின் வாயிலில் கூடியிருந்தனர். பிரதமருக்கான வரவேற்பு ஏற் பாட்டில் ஜப்பானிய சிறுவன் மற்றும் சிறுமியும் இடம் பெற்றி ருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை இந்தியில் வரவேற்றனர்.  உடனே பிரதமர் மோடி, “நீங்கள் எங்கிருந்து இந்தியைக் கற்றுக் கொண்டீர்கள்? உங்களுக்கு இந்தி நன்றாகத் தெரியுமா?” என கேட்டு, அவர்களுக்கு தனது  கையெழுத்தைப் போட்டுக்கொடுத்தார். 

அந்த மழலைகளில் ‘வணக்கம்’ என்னும் தமிழ்மொழி பதாகை யுடனும் ஒரு மழலை இருந்தது. ஆனால், ஹிந்தி மொழியில் பதாகை வைத்திருந்த ஜப்பானிய சிறுவனிடம் மட்டும் மிகவும் குழைந்து பேசிய பின்னர், மோடி யின் உருவப்படத்தைத் தாங்கியிருந்த பதாகையை ஏந்திய மழலையிடமும் இன்முகத்துடன் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என்று தமிழில் பதாகை வைத் திருந்த மழலையிடம் குறிப்பிடும் படி ஏதும் பேசவில்லை. இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் மோடிக்கு தமிழ் மீதான வெறுப்புணர்ச்சி மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது. ஆனால், அவர் தம் முடைய பல்வேறு உரைகளில் திருக்குறளையும் கூறிவருகிறார். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே அவரின் புறக்கணிப்பு தொடர்கிறது.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடு கள் இணைந்து ஏற்படுத்தியதே ‘குவாட்’ அமைப்பாகும். அதன்  அடிப்படையில், உறுப்பு நாடு களிடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு அவ்வப்போது மாநாடு களும் நடைபெற்று வருகின்றன.  அந்த வகையில், குவாட் அமைப்பின் 4ஆவது உச்சி மாநாடு  தற்போது ஜப்பானில் நடைபெறுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, ஞாயிறன்று மாலை பிரதமர் மோடி ஜப்பான் புறப் பட்டுச் சென்றார். 


No comments:

Post a Comment