தேசிய ஷெட்யூல்டு காஸ்ட் ஆணையம் ஒன்றிய சர்க்காரின் கைப்பாவையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

தேசிய ஷெட்யூல்டு காஸ்ட் ஆணையம் ஒன்றிய சர்க்காரின் கைப்பாவையா?

தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு, தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி வீரமணி அவர்கள் மீது தீண்டாமை அவதூறு குற்றச்சாட்டு. தொலைக்காட்சியில் அந்த செய்தி மீண்டும் ஒளிபரப்பப் பட்டபோதுதான் செய்தி கேட்டு  அதிர்ச்சியடைந்தேன். 

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு ஆகியவற்றை அடிப்படை கொள்கையாக, நோக்க மாக கொண்டு  இயங்கிவருகின்ற இயக் கத்தின் தலைவர் மீது தீண்டாமை அவதூறு குற்றம் சுமத்துவது இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச் சுவை. 

அண்ணல் அம்பேத்கர் அவர் களும், தந்தைபெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று அண்ணல் அம்பேத்கர் அவர் களின் கருத்துக்களை நாடெங்கிலும், பட்டி தொட்டிகளிலும் எடுத்துச்சென்று ஜாதியை வேரருக்க, நாள்தோறும் பாடுபட்டு வருகின்ற தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் மீது தீண்டாமை குற்றம் காண முயல்வது சூரியனில் டார்ச் லைட்டை அடித்துப் பார்ப்பதற்கு ஒப்பாகும். 

தந்தை பெரியார் அவர்களின் சித் தாந்தத்தைப் பற்றி பேசாமல் அவரின் சிலை மீது வன்மத்தை காட்டுவது, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சித்தாந்த புரிதலின்றி அவரது சிலை களின்மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, லட்சோபலட்ச தொண்டர் களோடு இந்து மதத்தை விட்டு வெளி யேறிய அண்ணல் அம்பேத்கரை பற்றி "ஹிந்துத்துவ அம்பேத்கர்" என்று நூல் எழுதி அவதூறு பரப்புவது என்பது சமீப காலத்தில் சனாதன சக்திகள் தமிழகத்தில் காலூன்ற கொடுத்திருக்கிற கீழ்த்தரமான  தந்திரங்கள். 

அரசமைப்புச் சட்ட அமைப்பு நிறுவனங்களை (Constitutional bodies) கொஞ்சம் கொஞ்சமாக அல்ல, மொத்தமாகவே தம்முடைய அரசியல் லாபங்களைப் பெருக்கிக் கொள்ள மொத்த குத்தகை எடுத்திருப்பதை போல, இப்போது தேசிய ஷெட்யூல்ட்டு காஸ்ட் ஆணையத்தை தவறாக பயன்படுத்தப் பார்க்கிறது பாஜக. 

இந்திய அரசமைப்புச் சட்ட பட்டி யலில் உள்ள ஜாதி மக்களை சுரண் டலில் இருந்து பாதுகாக்கவும், அம் மக்களின் சமூக கல்வி பொருளாதார மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும், இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 338இன் கீழ் நேரடியாக உருவாக்கப்பட்ட தேசிய ஷெட்யூல்டு காஸ்ட் ஆணையம் (National Commission for Scheduled Castes)  மக்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் நிறுவனம் என்றே கருதப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட வர்கள் இந்த ஆணையத்தை நேரடி யாக மனுக்கள் மூலமாக அணுகி தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், அதன் சமீபத்திய நடவடிக்கைகள், இந்த ஆணையம் ஆளும் சர்க்காரின் கைப்பாவையாகவே கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது  என்பதைத் தெளிவாக காட்டுகின்றன.

அண்ணல் அம்பேத்கர் அவர்களை பற்றிய எந்த நிகழ்விலும் பங்கெடுக்காத, ஷெட்யூல்டு காஸ்ட் மக்களின் சமகாலத்திய பிரச்சினைகளில் கருத்து ஏதும் தெரிவிக்காத, தன்னுடைய தொழிலில் மட்டுமே முழுமையாக  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள    இசையமைப்பாளர் இசைஞானி திரு. இளையராஜா அவர்கள் சமீபத்தில் ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரையில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர் களையும், இந்திய பிரதமர் மோடி அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டியிருந்தது  பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளை உள் வாங்கிய லட்சோபலட்ச மக்களுக்குப் பெரும் மனவருத்தத்தை    ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.   அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பீடு செய்தது பலரது முகத்தை சுளிக்க செய்தது, இன்னும் பல்லாயிரக்கணக் கானவர்கள் திரு. இளையராஜா அவர் களுக்கு அவருக்கு எதிரான கருத்துக் களை பொதுவெளியில் பதிவிட் டார்கள். எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கூற்றுப்படி இது ஒரு பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டு.

நீட்டுக்கு (NEET)  எதிரான பெரும் பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சி ஒன்றில் ஈரோட்டில் காங்கிரஸ் பேரியக் கத்தின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பேசும்போது திரு.இளைய ராஜா அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களை    மோடியுடன் ஒப்பிட்டது மிகத் தவறானது என்ற கருத்தில் பேசிய பேச்சை தவறாக பொருள் கொள்ள பலர் முயற்சித்தார்கள். 

அந்த மேடையில்  பேசிய திரா விடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள், திரு இளையராஜா அவர்கள் தெரிவித்த கருத்துக்களை பற்றி எதுவும் கூறவில்லை. காரணம் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்த நிலையில், திரு.இளங்கோவன்  அவர் களும், டாக்டர் கி.வீரமணி அவர்களும், ஷெட்யூல்ட்டு காஸ்ட் சமூகம் குறித்து இழிவாக பேசியதாக தேசிய ஆணை யம், சென்னை காவல் துறைக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. இது, திரு.இளையராஜா அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மீது கட்ட விழ்த்துவிட்ட வன்மத்தை அவமா னத்தை மறைக்க ஒன்றிய அரசு இப்படி ஒரு  முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. தேசிய ஷெட்யூல்ட் டு காஸ்ட் ஆணையம் மூலமாக தமிழர் தலைவர் அவர்களுக்கு களங்கம் கற்பிக்க முயற்சி எடுத்திருக்கிறது. தேசிய ஷெட்யூல்ட் டு காஸ்ட் கமிஷனின் இந்த முயற்சி வரலாற்றுப் பிழை என்று தந்தை பெரியாரை, அவர் கண்ட இயக்கம் திராவிடர் கழகத்தை, அதன் தலைவர் டாக்டர் கி வீரமணி அவர் களை நன்கறிந்த தமிழர்கள் அறி வார்கள். 

ஜாதி  ஒழிப்பும், ஜாதியின் ஒட் டுண்ணியான தீண்டாமை ஒழிப்பும் தான் தந்தை பெரியாரின் சித்தாந்தம், சமத்துவமும், சமவாய்ப்பும் ஏற்படுத்து வதுதான் அவரது கொள்கை - திட்டம் என்பதை தேசிய செட்யூல்டு காஸ்ட் ஆணையம்  தெரிந்திருக்கவில்லை என்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம். 

தந்தை பெரியார் சிலை மீது அசிங் கத்தை வீசினார்கள், காவியை பூசி னார்கள். ஆனால், தந்தை பெரியாரின் சித்தாந்தம் சனாதனத்தை பொசுக்கும் ஞாயிறு என்று அந்தக் கூலிப்படைப் புல்லுருவிகளுக்கு தெரிந்திருக்க வில்லை. 

தந்தை பெரியாரின் சித்தாந்த வாரிசு திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி மீது வீசப்பட்ட களங்கமும் அப்படித்தான் ஆகும். வழக்குகளும், நீதிமன்றங்களும் பெரியார் தொண்டர் களுக்கு புதிதல்ல. இப்படிப்பட்ட வழக் குகளை இயக்கத்தின் சுயமரியாதை சித்தாந்த கருத்துக்களை பொது வெளியில் பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பாகவே கொள்வர். ஆசிரியர் அவர்கள் தம்மீது சுமத்தப்பட்ட இந்த பொய், அவதூறு வழக்கை தமக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பாக கருதி ஆணையத்தின் அரசியலை  அம்பலப் படுத்த போவது நிச்சயம்.

 பேரா. முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்


No comments:

Post a Comment