பள்ளி வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

பள்ளி வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி. மே 21 பள்ளி வகுப்பறைகளில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சமீப காலமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க போக்சோ சட்டம் உள்பட பல சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் வழக்குகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.  இந்த நிலையில், பள்ளிகள், கல்லூரிகளின் அனைத்து வகுப்பறைகள், ஆய்வகங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த கால விசாரணையின்போது, பள்ளி வகுப்பறையினுள்  சிசிடிவி கேமராக்கள் பொருத் தினால்,  மாணவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் ஆசிரியர்களின் தனியுரிமையை மோசமாக பாதிக்கும் என்று அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருந்தது.  மாணவர்கள், அவர்களது பெற்றோர் அல்லது ஆசிரியர் களிடம் குறிப்பிட்ட ஒப்புதல் பெறாமல், வகுப்பறை களுக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத் துவது என்பது அவர்களின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என கூறப்பட்டது. இந்த வழக்கின் பல கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இன்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

தீர்ப்பில், பள்ளிகளில்  பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாய மாக்கலாம் என்று  அறிவுரை வழங்கியுள்ளது.  பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்க  ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்கலாம் எனவும் கூறியுள்ளது. பணியிடங்களில் விசாகா வழிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உரு வாக்குவது தொடர்பாக மனு மீது பதிலளிக்க அனைத்து மாநில, ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்திரவிட் டுள்ளது அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

No comments:

Post a Comment