ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* அய்தராபாத் வருகை தரும் பிரதமர் மோடியை புறக்கணித்து தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் பெங்களூர் பயணம்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* நீட் தேர்வு ரத்து மசோதா குடியரசுத் தலைவருக்கு சென்றுள்ளதையடுத்து, நீட் தேர்வுக்காக இதுவரை நடத்தி வந்த பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்பை ஒன்றிய அரசே மேற்கொள்ள வேண்டும் என சரத் பவார் கோரிக்கை. இது குறித்து மும்பையில் தேசிய வாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

' * ஒன்றிய அரசின் கோதுமை தடை விவசாயி களை பாதிக்கிறது, ஆனால் விலக்குகள் ஏற்றுமதியாளர் களுக்கு உதவுகின்றன.நரேந்திர மோடி தலைமையிலான அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் குழு அமைக் கப்படும் என்றும், விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகவும் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதாகவும்  யோகேந்திர யாதவ்  குற்றம் சாட்டி யுள்ளார்.

* இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மய மாக்கும் பணியில் மோடி அரசு ஈடுபட்டு வருவதாகவும், வரும் மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி டெலிகிராப்:

* பாஜக ஆளும்  கருநாடக மாநிலத்தில், கேரளா வின் சிறீநாராயண குரு மற்றும் தமிழ்நாட்டின் பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் பல முற்போக்கு எழுத்தா ளர்களின் படைப்புகள் மற்றும் பாடங்களை நீக்கிடுவதற்கும்,  ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் உரையை பாடப்புத்தகங்களில்  சேர்ப்ப தற்கும், இரண்டு பிரபல கன்னட எழுத்தாளர்கள் தேவ னூர் மகாதேவா மற்றும் ஜி. ராமகிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment