இலங்கையில் பிரதமரே நிதியமைச்சரானார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

இலங்கையில் பிரதமரே நிதியமைச்சரானார்

கொழும்பு,மே26- கடும் பொரு ளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினரை எதிர்த்து அற வழிப்போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது வன்முறை திணிக்கப் பட்டது. 

அதன்விளைவாக கொந்தளிப் பான சூழல் ஏற்பட்டு, பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். 

அதன்பின்னர் இலங்கை பிரத மராக அண்மையில் பொறுப் பேற்றுக் கொண்ட ரணில் விக்ரம சிங்கே நேற்று (25.5.2022) அந் நாட்டின் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து  ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. 

இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்சே,  போராட்டக் காரர்களிடம் சிக் காமல் இருக்க தப்பி ஓடினார்.  அவரது வீட்டை மக்கள் முற்று கையிட்டு தாக்குதல் நடத்தியதால், அவர் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றார். பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டார். அத னால், 5 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கே, புதிய பிரதமராக கடந்த 12.5.2022 அன்று நியமிக்கப்பட்டார். 

அவர் வெளி நாடுகளுடன் பேசி, இலங்கைக்கு எரிபொருள் கிடைப்பதற்கான நடவடிக்கை

களை உடனடியாக மேற்கொண் டார்.  அரசியல் சாசனத்திலும் சீர் திருத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இடைக் கால நிதிநிலை அறிக்கை தயாரிப் பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையின் பொருளா தாரத்தை மீட்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி களையும் சார்ந்துள்ளார். வெளி நாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட் டதால், திவால் அறிப்பை இலங்கை கடந்த மாதம் வெளியிட்டது. இந்நிலையில் இலங்கை அமைச் சரவை கடந்த 20ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. 

அப்போது கல்வி, துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், நீதித்துறை, வர்த்தகம் போன்ற துறைகளில் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அப்போது நிதிய மைச்சர் நியமிக்கப்பட வில்லை.

இதையடுத்து கடந்த 23ஆம் தேதி, அமைச்சரவை இரண்டாவது முறையாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது 8 அமைச்சர்கள் பதவி யேற்றனர். இதில் ஆளும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இலங்கை சுதந்திரக் கட்சி, தமிழர்களின் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந் தவர்கள் அமைச்சர்களாக பொறுப் பேற்றனர்.  அப்போதும் நிதிய மைச்சர் நியமிக்கப்படவில்லை. இந் நிலை யில், நேற்று (25.5.2022) இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே நிதியமைச்சராக பொறுப் பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment