ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

டெல்லியில் உள்ள குதுப் மினார் வழிபாட்டுத் தலம் அல்ல, தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா பங்குச் சந்தையில் மோசடி செய்ததற்காக ரூ.3.1 கோடி அபராதம் கட்ட வேண்டும். தவறினால் சிறை என செபி அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் தகவல்.

அய்தராபாத்தில் கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் இந்திய வணிக கல்லூரி விழாவிற்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு, அங்கு படிக்கும் மாணவர்களின் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவை அதிகாரிகள் சரிபார்ப்பு.

தி டெலிகிராப்:

இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருந்தாலும், பிரிவினையின் எழுச்சி மற்றும் மத ரீதியான பிளவுகள் ஆகியவை நாட்டின் வளர்ச்சியின் அடித்தளத்தை சேதப்படுத்துகிறது என்று உலக வங்கி யின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு தெரிவித்துள்ளார்.

ஞானவாபி மசூதி வழக்கு நடைபெறும் வாரணாசி நீதிமன்றத்தில் உள்ளே வழக்குரைஞர்கள் ஹர ஹர மகாதேவா என்று முழக்கமிட்டனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

அய்ரோப்பா போல இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். தேசம் என்ற சொல் மேற்கத்திய சொல்லாடல் என லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேச்சு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment