அதிகரிக்கும் கரோனா உலக சுகாதார நிறுவன இயக்குநர் கவலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

அதிகரிக்கும் கரோனா உலக சுகாதார நிறுவன இயக்குநர் கவலை

ஜெனீவா,மே18- உலகளவில் கடந்த வாரம் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்,"கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 4இல் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. சோதனைகளும், மரபணு பகுப்பாய்வு சோதனைகளும் கூட உலகளவில் குறைந்துள்ளன. இதனால், கரோனா வைரஸ் இப்போது எந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அது எவ்வாறாக உருமாறி வருகிறது என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவில் 1.7 மில்லியன் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது. அங்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதிகமாக இருப்பதால் இது கவலையை இன்னும் அதிகரிக்கிறது. வட கொரியாவில் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் மக்களுக்கு தீவிர நோய் பாதிப்புகள் ஏற்படுமோ எனத் தோன்றுகிறது" என்றார்.


No comments:

Post a Comment