ஆதீனங்களும், பல்லக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

ஆதீனங்களும், பல்லக்கும்!

1)  சுத்த சைவ ஆதீனங்கள் 18 இல் குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம் ஆகிய வீர சைவ ஆதீனங்கள் பல்லக்கு ஏறுவதில்லை.

2) மதுரை ஆதீனமாக விளங்கிய அருணகிரிநாத சுவாமி 

40 ஆண்டுகளாக பல்லக்கே ஏறவில்லை!

3) காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்ற போது கூட பல்லக்கு ஏறவில்லை!

4) சூரியனார் கோயில் ஆதீனம் பட்டமேற்ற போது மட்டும் பல்லக்கு ஏறியிருக்கிறார்!

5) திருவாவடுதுறை ஆதீனத்தின் 23 ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் ஏறமாட்டேன் என்றும், பொன் ஆபரணங்களை அணிவதைத் தவிர்த்தும், பண்டிதர்கள் மட்டுமே பயின்ற திருமுறை சைவ சாத்திரங்களை அனைத்து சமுதாய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று எளிய முறையில் அவர்களுக்கு 'ஆசி' நல்கி வந்தவர். 

பின்னாளில் ஆதீன பிரமுகர்களின் கடும் கட்டாயத்தின் பேரில், சம்பிரதாயப்படி அன்று மட்டும் பல்லக்கு ஏறியும், பொன் ஆபரணம் அணிந்தும் வலம் வந்தார். அவர் மறைவிற்குப் பின் தற்போது உள்ளவர் ஆண்டுதோறும் பட்டணப்பிரவேச பல்லக்கில் வலம் வருகிறார்!

6) இன்றைக்கு தன் உயிருக்கு ஆபத்து என்று கூறும் மதுரை ஆதீனம், ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வர் குரு பூஜையன்று ஏற வேண்டிய பல்லக்கை இவ்வாண்டு ஏறாமல் தவிர்த்துள்ளார்!

7) பட்டணப் பிரவேச நிகழ்ச்சியை ஆதீன குரு முதல்வர் குரு பூஜையன்றே நடத்துவர். மதுரை ஆதீனத்தில் ஞானசம் பந்தருக்கு வெள்ளிக் கோரத புறப்பாடு மட்டுமே!

8) 05.05.2022 இல் நடைபெற்ற வேளாக்குறிச்சி ஆதீன குரு முதல்வர் குருபூஜையில் பட்டணப் பிரவேசமோ,  பல்லக்கோ இல்லை.

9) செங்கோல் ஆதீனத்திலும் தற்போது தான் குரு முதல்வர் குரு பூஜை. இதில் ஆதீன குரு முதல்வர் சிலைக்குத் தான் பட்டணப் பிரவேசமே தவிர, இப்போதிருக்கும் ஆதீனத்திற்கு அல்ல!

10) தருமபுரத்தில் முந்தைய ஆதீனம் இருக்கும் போதே, இதே பல்லக்கு விவகாரத்திற்காக 1963 இல் தந்தை பெரியார் அவர்களால் எதிர்க்கப்பட்டு, அப்போதே இந்த பல்லக்கில் உட்கார்ந்து மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டது! அதன் பின் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

11) புதிய ஆதீனம் பதவி ஏற்ற பின் 2020 இல் மீண்டும் இந்தப் பழக்கத்தை ஆரம்பிக்க முயல, உடனடியாக திராவிடர் கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதால் நிறுத்தப்பட்டது!

12) 1963 இல் நிறுத்தப்பட்ட இந்த பழக்கத்தை, மீண்டும் திடீரென 2020இல் ஆரம்பிக்க நினைத்தவர்கள், 2021 இல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது நடத்துவோம் என்கிற அறிவிப்புக்குப் பின் நிச்சயமாகத் தூண்டுதல் இருக்கவே வாய்ப்பிருக்கிறது!

அதிலும் 500 ஆண்டு பழக்கம், வழக்கம் என்று பொய் சொல்வதெல்லாம் சங்கிகளின் கூற்றை ஒத்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு இந்த பின்னணியைத் தீவிரமாக விசாரித்து, தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!

தகவல் : அ.சிவக்குமார்


No comments:

Post a Comment