‘மகரிஷி சரக் ஷபாத்' மந்திரமா? டீன்கள் மீது நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

‘மகரிஷி சரக் ஷபாத்' மந்திரமா? டீன்கள் மீது நடவடிக்கை

மதுரை, மே 4- மருத்துவக் கல் லூரிகளில் பாரம்பரிய உறுதிமொழியான ஹிப் போகிராடிக் உறுதிமொ ழிக்குப் பதிலாக 'மகரிஷி சரக் ஷபாத்' என்ற பெயரில் சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கு அனைத்து மருத்துவ கல் லூரி டீன்கள் மீதும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று மருத்து வக்கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறினார்.

மதுரை அரசு மருத் துவ கல்லூரியில் உறுதி மொழி ஏற்பு விவகாரத் தில் எழுந்த சர்ச்சை கார ணமாக, மருத்துவர்  (டீன்) ரத்தினவேல் காத்திருப்போர் பட்டி யலுக்கு மாற்றப்பட்டார்.

மதுரை மருத்துவக்கல் லூரியில் சமஸ்கிருத உறுதி மொழி ஏற்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க மருத்துவக்கல்லூரி இயக் குநர் நாராயண பாபு தலைமையில் திருநெல் வேலி மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தா ராம் தலைமையில் மூன்று பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. 

மேனாள் டீன் ரத்தின வேல், துணை முதல்வர் தனலட் சுமி, மாணவர் அமைப்புத் தலைவர் ஜோதிஸ் குமார வேல் உள்ளிட்டோரிடம் மதுரை மருத்துவக்கல் லூரி முதல்வர் அலுவல கத்தில் விசாரணை நடை பெற்றது.

பின்னர் நாராயண பாபு செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

மாணவர்கள், மருத்துவர் (டீன்) உள் ளிட்டோரிடம் விசா ரணை நடத்தி உள்ளோம். விசாரணை குறித்து அர சுக்கு அறிக்கை அனுப்பப் படும். தவறுதலாக சமஸ் கிருத உறுதிமொழி எடுக் கப்பட்டு உள்ளது. மாண வர்கள் அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணை யம் அனுப்பியது சுற்ற றிக்கை மட்டுமே, உத்த ரவு அல்ல.

பிப்ரவரி 10ஆம் தேதி சுகாதாரத்துறை செயலா ளர் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக் கும், தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கை களை அப்படியே பின் பற்ற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். அதையும் மீறி சர்ச்சைக் குரிய உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவ கல்லூரிகள் மீதும் நட வடிக்கை எடுக்கப்படும்.

உறுதிமொழி ஒத்திகை எடுக்கப்பட்ட போது பொறுப்பு முதல்வர் தன லட்சுமி களத்தில் இல்லை என விசாரணையில் தெரிவித்து உள்ளார். விசாரணை அறிக்கை அடிப்படையில் தலைமை மருத்துவரை மீண்டும் நியமிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment