ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் ஓராட்சி முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக 84.5 சதவீத மக்கள் கருதுவதாக அய்.ஏ.என்.எஸ். சார்பில் சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தி டெலிகிராப்:

இந்த மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை உயர்த்துவதற்கான ஒன்றிய அரசின் விரைவான ஒப்புதல், நீதித்துறை வட்டாரங்களில் கணிசமான அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் 2014 விலையை விட இருமடங்காக விற்கப்பட்ட நிலையில், எரிபொருள் விலையில் டோக்கன் குறைப்பு என்று விவரித்ததை "நிவாரணம்" எனக் காட்டி மக்களை "முட்டாளாக்குவதை" நிறுத்துமாறு மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

கோவிட்-19 இன் ஒருங்கிணைந்த நெருக்கடிகள், ஏற்றத்தாழ்வு மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 26.3 கோடி மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளக்கூடும் என்று ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் இன் புதிய அறிக்கையானது மதிப்பிடுகிறது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment