குப்பைத் திட்டில் பல்வேறு உயிரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

குப்பைத் திட்டில் பல்வேறு உயிரிகள்

  அண்மையில், எலான் மஸ்க், டுவிட்டரை வளைத்துப்போட்டார். அதே நேரத்தில், 'பசிபிக் பெருங்கடல் குப்பைத் திட்'டிலிருந்து வளைத்துப்போட்ட பல உயிரினங்களின் படங்களை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரெபெக்கா ஹெல்ம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலைனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இவரது புகைப்படங்களுள் ஒன்று நீலக் கடல் டிராகன் பற்றியது. இந்த டிராகன் மீன், தன் எதிரிகளை கொன்று அவற்றின் உடல் பாகங்களை தன் உடலில் கவசம் போல அலங்கரித்துள்ளது.

பசிபிக் கடலில் சேரும் குப்பையை, டன் கணக்கில் சேர்ந்து ஒரு பெரிய தீவாகவே மிதக்கத் துவங்கியுள்ளன. இது 1997இல் முதல் முதலாக கண்டறியப்பட்டது. 

வானிலிருந்து பார்த்தால் அத்தனை பெரிதாகத் தெரியாது. 

ஆனால், கடலடியில் தொகுப்பாக மிதக்கும் இந்த திட்டின் பரப்பளவு, 16 லட்சம் சதுர கி.மீ.! அதாவது, மூன்று பிரான்சு நாட்டின்பரப்பளவுக்குச் சமம்.

பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன இந்த திட்டு, நிலையாக ஓரிடத்தில் இருக்காது. கடலடி நீரோட்டத்திற்கு ஏற்றபடி நகரும் தன்மை கொண்டது. ஆனால், இந்த குப்பைத் தீவில் தற்போது பல்லாயிரம் உயிரினங்கள் குடியேறி, பல்கிப் பெருகத் துவங்கிவிட்டன. 

'ஓஷன் கிளீன் அப்' போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள், கடல் குப்பையை அள்ளி அகற்றும் பணியில் ஈடுபடும்போது, இந்த உயிரினங்களும் கடலிலிருந்து அகற்றப்படுகின்றன.

எனவே அந்த முயற்சியைக் கைவிடவேண்டும் என்றும், இனிமேல் கடலுக்குள் குப்பை வராமல் தடுக்கப் பாடுபடவேண்டும் என்றும் கடல் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரியலுக்கும் சூழலியலுக்கும் ஒரு இழுபறியை ஏற்படுத்தியுள்ளது பசிபிக் பெருங்கடல் குப்பைத் திட்டு. 

No comments:

Post a Comment