ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 29, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

ஹிந்து பாரம்பரிய தளங்களை ஒடிசா மாநில பிஜூ ஜனதா தள அரசு அழிக்கிறது என்கிறார் பூரி சங்கராச்சாரி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 அரசியல் நிர்ணய சபை நிராகரித்த ஒற்றை ஆட் சியை பாஜக கொண்டு வர எத்தனிக்கிறது, ப.சிதம்பரம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் போது, பல்வேறு துறைகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியிடங்கள்  நிரப்பப் படாமல் காலியாக உள்ளன என குற்றச்சாட்டு.

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் 'பூர்வீக இந்தியர் களா', 'திராவிடர்களா' அல்லது 'ஆரியர்களா' என காங் கிரஸ் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

றீ குஜராத் மாடல் என மோடி பெருமைப் பட்டுக் கொள்ளும்  நிலையில் அந்த மாடலை தெரிந்து கொள்ள பாஜக ஆளும் அரசுகள் கூட குழுவை அனுப்பவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கிண்டல்.

 தற்போதைய அரசுக்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று இந்து ராஷ்டிராவை நிறுவுவது என மனித உரிமைகள் வழக்குரைஞரும், ஃபாதர் ஸ்டான் ஸ்வாமி வழக்குக்காக வாதாடும் மூத்த வழக்குரைஞருமான மிஹிர் தேசாய் கூறியுள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment