மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 90 நாட்களில் நடவடிக்கை: கோட்டாட்சியர்களுக்கு உத்தரவு- உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 90 நாட்களில் நடவடிக்கை: கோட்டாட்சியர்களுக்கு உத்தரவு- உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை, மே 5- மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நட வடிக்கை எடுக்காத கோட்டாட் சியர்களுக்கு அரசு எச்சரிக்கை.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 66). இவர் தன் மகனுக்கு எதிராக சென்னை மாவட்டஆட்சியரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தன் மகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது நீதிபதி, மனுதாரர் கடந்த ஆண்டு புகார் கொடுத்துள்ளார். 

ஆனால் இதுவரை ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கேள்வி எழுப்பினார். பின்னர், தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் கொடுத்த புகார்களின் எண்ணிக்கை, அவற்றின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தர விட்டார். அதன்படி அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் 292 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மூத்த குடி மக்கள் சட்டத்தின்படி அளிக் கப்படும் புகார்களின் மீது 90 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத கோட்டாட்சியர்கள்தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு வருகிற ஜூன் மாதம் விசாரணைக்கு வரஉள்ளது.

No comments:

Post a Comment