தமிழ்நாட்டில் 5 ரயில் நிலையங்கள் பன்னாட்டு தரத்துக்கு உயர்த்தப்படும் ஒன்றிய அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

தமிழ்நாட்டில் 5 ரயில் நிலையங்கள் பன்னாட்டு தரத்துக்கு உயர்த்தப்படும் ஒன்றிய அமைச்சர் தகவல்

சென்னை, மே 21 தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 ரயில் நிலையங்கள் பன்னாட்டு தரத்துக்கு உயர்த்தப்படும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

பயணிகள் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவ தற்காக 2019-ல் `வந்தே பாரத்' என்ற அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது டில்லி-வாரணாசி மற்றும் டில்லி-காத்ரா இடையே 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில்களுக்கான பெட்டிகள் சென்னை, பெரம்பூர் அய்சிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இதில் 2 பெட்டிகள், வரும் ஆகஸ்ட் மாதம் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதேபோல, 75 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், அய்சிஎஃப் தொழிற்சாலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (20.5.2022) வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, அதிக பயணிகள் செல்லும் வசதி போன்றவற்றில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக, அனைத்து ரயில் நிலையங்களும் மேம் படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக 50 ரயில் நிலை யங்கள் பன்னாட்டு அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள் ளன. தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, கன் னியாகுமரி, ராமேசுவரம் மற்றும் காட்பாடி ரயில் நிலை யங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.3,685 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே தனியார்மயமாக் கப்படாது. இந்திய ரயில்வேயில் `கவச்' என்ற ரயில் பாதுகாப்புக் கருவி மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத் தப்படும். ரயில் தடத்தின் தரம், பாதுகாப்பு மற்றும் பாலங்களின் நிலை ஆகிய அனைத்தும் மேம்படுத்தப் படும். ரயில்களில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக, ரயில் தண்டவாளங்கள் உயர்த்தப்படு வதுடன், யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும்.

தமிழ் கற்க அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து ரயில்வே ஊழியர்களும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது பயணிகளுடனான உறவையும், ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


No comments:

Post a Comment