30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் நியமனம்

பாரிஸ், மே 19 பிரான்சில் 30 ஆண்டு களுக்கு பிறகு பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தொடர்ந்து 2ஆவது முறையாக அதிபர் பதவிக்கு மேக்ரான் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லூ பென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் மேக்ரான் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் பிரான்சில் நடைபெற்ற விழாவில் மேக்ரான் பிரான்ஸ் அதிபராக 2-ஆவது முறையாக பதவியேற்றார்.

பிரான்சில் கடந்த 20 ஆண்டுகளில் அதிபராக இருக்கும் ஒருவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

2ஆவது பெண் பிரதமர்

இந்த நிலையில் பிரான்சில் விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மந்திரிசபையில் மாற்றம் கொண்டுவர மேக்ரான் முடிவு செய்துள்ளார். இதற்கு ஏதுவாக பிரதமர் ஜீன் காஸ்ட்க்ஸ் தனது பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜீன் காஸ்ட்க்ஸ் நேற்று முன்தினம் பிரதமர் தனது பதவியை விட்டு விலகினார்.

இந்த நிலையில் பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி என்பவரை அதிபர் மேக்ரான் நியமித் துள்ளார். பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் பிரதமராக நிய மிக்கப்பட்டுள்ளார். அதோடு பிரான்ஸ் வரலாற்றில் பிரதமராக நியமிக்கப் பட்டுள்ள 2-ஆவது பெண் எலிசபெத் போர்னி ஆவார்.

தொழில்நுட்ப வல்லுநர்

61 வயதான எலிசபெத் போர்னி கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஜீன் காஸ்ட்க்சின் அமைச்சரவையில் தொழிலாளர்துறை அமைச்சராக இருந்து வந்தார். 

இவருடைய பதவி காலத்தில் பிரான்சில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் வீழ்ச்சியடைந்தது குறிப் பிடத்தக்கது. 

மேலும் இவர் தொழிற்சங்கங்களுடன் விவேகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடிய ஒரு திறமையான தொழில் நுட்ப வல்லுநராகக் அறியப்படுபவர் ஆவார்.

அதிபர் மேக்ரானும், பிரதமர் எலிசபெத்தும் இணைந்து முழுமையான மந்திரிசபையை வரும் நாள்களில் அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.

No comments:

Post a Comment