தனியார் மய ஆட்சி: ஹிந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனத்தின் எஞ்சிய 29.5 விழுக்காடு பங்குகளும் விற்பனையாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 27, 2022

தனியார் மய ஆட்சி: ஹிந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனத்தின் எஞ்சிய 29.5 விழுக்காடு பங்குகளும் விற்பனையாம்

புதுடில்லி,மே 27- அரசிடம் 29.5 விழுக்காடு பங்கு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அந்த பங்குகளையும் தனியா ருக்கு விற்பனை செய்ய ஒன் றிய பாஜக அரசு முடிவெடுத் துள்ளது.

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் எஞ்சியுள்ள பங்குகளை விற்க உள்ளதாக ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரங்க ளுக்கான கூட்டம் 25.5.2022 அன்று நடைபெற்றது. அக் கூட்டத்தில் ஹிந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்வதென முடி வெடுக்கப்பட்டு, தனியார் மயமாக்கலில் தீவிரம் காட்டி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. மே மாதம் 25ஆம் நாள் நடை பெற்ற இந்த முடிவுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக் குப் பிறகு, ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் (HZL)--இன் 29.5% பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கிறது.

பொதுத்துறை நிறுவ னங்களை ஒன்றிய பாஜக அரசின் தனியார் மயமாக் கலால் பெருமளவில் சிதைக் கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய காப்பீட்டு நிறுவன மாக விளங்கிய எல்அய்சி பங்குகள் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து தற் போது, ஹிந்துஸ்தான் வைத் திருக்கும் 29.5% பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கிறது(Hindustan Zinc Dividend).

உலகின் மிகப்பெரிய துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி உற்பத்தியாளர் களில் ஒன்றானது தான் ஹிந்துஸ்தான் துத்தநாக நிறுவனம். இதன் பங்குகளை விற்பதற்கு அரசு திட்ட மிட்டிருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் இந்நிறுவனத் தின் ஊழியர் சங்கம் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தி யது. இதன் அடிப்படையில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அதன் பங்கு களை சந்தையில் விற்க அனு மதி அளித்தது.

மே மாதம் 25 ஆம் நாளின் படி, பிஞீலி பங்குகள் 3.14% உயர்ந்துள்ளது. மேலும் ரூபாய் மதிப்பில் ரூ.305.5 ஆக இருந்தது. அதாவது ஹிந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பான ரூ.1.28 டிரில்லியனில் உள்ளது. 

ரூ. 37,700 கோடி மதிப் பில் அதன் முழுப்பங்குகளை யும் விற்பனை செய்வதன் மூலம் பொதுத்துறை நிறுவ னத்தை முற்றிலும் தனியார் மயமாக்கி ஒன்றிய அரசு வருவாய் ஈட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தபோதிலும், அந்நிறுவ னத்தின் பங்குகள் விறப்னை செய்யப்பட்டு வந்துள்ளன. 

ஒன்றிய அரசின் தனி யார் மயமாக்கும் கொள்கை முடிவுகளால் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறி யாகிவிட்டது. 

மேலும், நீண்ட நெடுங் காலமாக மக்களின் வரிப் பணத்திலிருந்து கட்டமைக் கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மய மாக்கப்பட்டு, பாஜக அரசு திட்டமிட்டு தனி முதலாளி களை கொழுக்கச் செய்து வருகிறது.

No comments:

Post a Comment