போக்குவரத்து வாகனங்களுக்கான விற்பனை சேவை மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

போக்குவரத்து வாகனங்களுக்கான விற்பனை சேவை மய்யம்

சென்னை, ஏப். 27- நிலையான போக்குவரத்துத் தீர்வு களை வழங்கும் பிரிட்ஜ்ஸ்டோன் முன்னணி பன் னாட்டு நிறுவனமாகும். நேரடி புரிதலுடன் டயர் வாங்குவதற்கான விற் பனை சேவை மய்யத்தை ‘செலக்ட் பிளஸ்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்நிறு வனம் தற்போது அறி முகப்படுத்தியுள்ளது. 

வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே ஒரே தொடர்புப் புள்ளி யாக இருக்கும் டயர்கள், ஓட்டுநரின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன.  எனவே, வாடிக்கையாளர் களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அனுப வத்தை வழங்குவதில் பிரிட்ஜ்ஸ்டோன் தீர்மா னமாக உள்ளது.

சென்னை அண்ணா சாலையின் தேனாம் பேட்டை பகுதியில் உள்ள செலக்ட் பிளஸ் கான்செப்ட் ஸ்டோர், டயர் தேர்வு, அதன் பரா மரிப்பு சார்ந்து வாடிக்கை யாளர்களுக்கு இருந்து வந்த நீண்ட காலத் தேவை யைப் பூர்த்தி செய்துள் ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த விற்ப னையகம் அறிமுகப்ப டுத்த இந்நிறுவனம் திட் டமிட்டுள்ளது.

நுகர்வோர் பெறும் அனுபவத்தில் எப்போ தும் மாற்றத்தை முன் னெடுத்து வருகிறோம். இந்த விற்பனையகம் மூலம், அவர்களின் தேவைக்கு மிகவும் பொருத்தமான, திட்டவட்டமான டயர் தேர்வை மேற்கொள்ள அவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். இந்த வித் தியாசமான விற்பனை சேவை மய்யம் தரும் அனு பவத்தைப் போலவே நேரடி அனுபவம் தரும் விற்பனையகங்களை எங்கள் டீலர்களுக்கு உரு வாக்கித் தர விரும்புகி றோம்” என்று புதிய விற் பனையகத்தை திறந்து வைத்தபோது, பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜோத்ஸ்னா கூறியுள்ளார்.


No comments:

Post a Comment