ஹிந்தி பேசாத இந்திய மக்களின் மீது ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி கைவிடப்படவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

ஹிந்தி பேசாத இந்திய மக்களின் மீது ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி கைவிடப்படவேண்டும்

 [12.04.2022 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம்]

ஹிந்தி பேசாத மக்கள் வாழும் பகுதி, மாநில மக்களுக்கு இணைப்பு மொழியாக ஹிந்தியை ஆக் குவது பற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கை முற்றிலும் தேவையற்றதாகும். நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஹிந்தியைப் பரப்பும் கடமை அவருக்கு இருக்கிறது என்ற போதிலும், கடந்த வாரம் புதுடில்லியில் நடைபெற்ற இக்குழுவின் 37ஆவது கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு ஹிந்தி மொழியை ஹிந்தி பேசாத மக்கள்மீது திணிப்பதை அவர் விரும்புகிறார் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

ஹிந்தி பேசாத மக்கள் ஏதேனும் ஒரு இந்திய மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய அமித்ஷா, ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு ஒரு மாற்று மொழியாக, உள்ளூர் மொழிக்கு மாற்றாக அல்லாமல், பயன்படுத்துவதை ஹிந்தி பேசாத மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தங்களது கடிதப் போக்குவரத்து எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை ஹிந்தி பேசாத, இரண்டு பகுதி அல்லது மாநிலங்களின் மக்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

உலக மொழியான ஆங்கில மொழியே தங் களுக்கு சவுகரியமான இணைப்பு மொழியாக இருக்கும் என்று அவர்கள் கருதினால், ஆங்கிலத்தைக் கைவிட்டுவிட்டு ஹிந்தியையோ அல்லது வேறு ஒரு இந்திய மொழியையோ இணைப்பு மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு ஆலோசனை கூறுவதற்கு எந்தவிதத் தேவையு மில்லை.

ஆங்கிலம் ஒரு இந்திய மொழி அல்ல என்றே அமித்ஷா கருதுகிறார் என்பது போன்றே தோன்றுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளைப் போன்று ஆங்கிலமும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் ஒன்று என்பதை அவர் கவனிக்கத் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது.

அதேபோல, கலாச்சார அமைச்சகத்தின் கீழ் நாட்டின் இலக்கிய மேம்பாட்டுக்காக இயங்கும் ஓர் ஒன்றிய அரசின் நிறுவனமான சாகித்திய அகாடமி யால் இந்தியர்கள் எழுதிய மிகச் சிறந்த ஆங்கில மொழி நூல்களுக்கு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன என்ற வகையில் ஆங்கில மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரமும் கவனிக்கப் படவில்லை என்றே தோன்றுகிறது.

மேலும் ஆங்கில மொழி இந்திய நாட்டுக்குப் பெற்றுத் தரும் பல ஆதாயங்களும், அனுகூலங்களும் மனதில் கொள்ளப்பட வேண்டும். கருநாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவகுமார் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராக பெங்களூரு நகரம் ஆனதே ஆங்கில மொழியினால்தான்.

ஒன்றிய உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் இந்தியாவைப் போன்ற மிகப் பெரிய, பன்முகத் தன்மை கொண்ட ஒரு சமூகத்தை இணைக் கும் ஆங்கில மொழிமீது இத்தகைய வெறுப்புக் கொண்டிருப்பது அழகானதும் பொருத்தமானதும் அல்ல.

எதிர்பார்த்தபடி, அமித்ஷாவின் இந்த அறிவிப்பு, அரசியல் ரீதியாக, குறிப்பாக பா...வின் எதிர்க்கட்சி களிடமிருந்து கடுமையான கண்டனத்தைப் பெற் றுள்ளது. பா...வுடன் நட்புறவு கொண்டிருக்கும் ...தி.மு.. கூட, ஹிந்தியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கட்சி ஒருங்கிணைப்பாளரும், மேனாள் தமிழ்நாடு முதலமைச்சருமான .பன்னீர்செல்வத்தின் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், மிக மிக முக்கியமாக, நாட்டில் ஒற்றுமையை உருவாக்க முடியாதது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் சுட்டிக் காட்டியது போல், "ஒரே அடையாளத்தை" உருவாக்குவதற்கு முயற்சிக்கும் ஷாவை - மிகச் சரியாகவே கடுமையாக சாடியுள்ளார். ஹிந்தியை மட்டுமல்ல, வேறு எந்த ஓர் இந்திய மொழியையும் போற்றி வளர்க்க வேண்டாம் என்று எவரும் கூறுவதற்கு முன் வரவில்லை. அனைத்து வகையான ஆதரவுகளும் அரசினால் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டும். அவற்றைப் பெறுவதற்கு அவை தகுதி பெற்றவையே.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வெறும் பேச்சுடன் நின்று விடாமல் செயல் அளவிலும் அத் திசையை நோக்கி முக்கியமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதே நேரத்தில், இத்தகைய இந்திய மொழிகளின் மேம்பாட்டு செயல் திட்டத்தில், ஆங்கில மொழிக்கு பின்னடைவோ, புறக்கணிப்போ ஏற்படுவதற்கு ஒரு சிறிய அளவிலும் கூட இடம் அளிக்கப்பட கூடாது.

பல்வேறு கலாச்சாரம் மற்றும் பன்முகத் தன்மை யின் அடையாளத்தை அரசியல் வாரிசுகள், குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள் பதித்துக் கொண்டவர்களாக விளங்க வேண்டும். அந்த நற்தன்மைகள் தன்னிடம் அதிகமாக இருக் கின்றன என்பதை அமித்ஷா தனது சொற்களாலும், செயல்களாலும் எடுத்துக்காட்ட வேண்டும்.

நன்றி: ‘தி இந்து', 12.4.2022

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment