"நாட்டை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சினையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்" ராகுல் காந்தி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

"நாட்டை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சினையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்" ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.28- இந்தியா வில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒருசேர நிகழ சாத்தியமில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் மேனாள் தலை வரும் மக்களவை உறுப்பினரு மான ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக் கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா வில் வர்த்தகத்தை நிறுத்திய பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த தகவலை பதிவிட்டுள் ளார். மேலும்  இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒருசேர நிகழ சாத்தியமில்லை என குறிப் பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

இந்திய சூழலால் 7 பன் னாட்டு நிறுவனங்கள் இந் தியாவை விட்டு சென்றுவிட் டன. 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 649 டீலர் ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள் ளன. இதனால் 84,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந் துள்ளனர்.

2017ஆம் ஆண்டு செவ் ரோலெட் வெளியேறியது. 2018-இல் மேன் டிரக்ஸ் வெளி யேறியது. 2019-ல் ஃபியாட் மற்றும் யுனைட்டெட் மோட்டார்ஸும், 2020-இல் ஹார்லி டேவிட்ஸனும், 2021-இல் ஃபோர்டும், 2022-ல் டாட்ஸன் நிறுவனமும் இந் தியாவில் இருந்து வெளியேறி யுள்ளன.

மோடி அவர்களே, இந்தி யாவில் வெறுப்பும், வளர்ச் சியும் ஒருசேர நிகழ சாத்திய மில்லை. இந்தியாவை சீரழிக் கும் வேலையிழப்பு பிரச் சனையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


No comments:

Post a Comment