வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 16, 2022

வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: மேனேஜர் - டிஜிட்டல் பிராட் 15, கிரடிட் ஆபிசர் 40, கிரடிட் எக்ஸ்போர்ட் / இம்போர்ட் பிசினஸ் 20, பாரெக்ஸ் அக்கியூசிசன் 15, கார்ப்பரேட் கிரடிட் டிபார்ட்மென்ட் 15 என மொத்தம் 105 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / முதுநிலை பட்டப்படிப்பு / ஏதாவது ஒரு பட்டப்படிப்பு/ சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : 1.2.2022 அடிப்படையில் 24 - 34, 28 - 40, 25 - 37, 26 - 40 என பதவி வாரியாக மாறுபடுகிறது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : இணைய வழி எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை மட்டும்

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. பெண்கள்  தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.100. கடைசிநாள்: 24.3.2022 

விவரங்களுக்கு:  https://www.bankofbaroda.in

No comments:

Post a Comment