இருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 21, 2022

இருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்

மருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்த நம் முன்னோர்கள், மலைகள், காடுகளை கடந்து சென்று மூலிகை செடிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவை கடைத்தெருக்களிலே எளிதில் கிடைப்பதால், இயற்கை மருத்துவத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் அதனை உணவோடு எடுத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வகை உணவு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருந்தாகவே அமைந்து விடுகிறது.

அத்தகைய மூலிகை பொருட்களில் ஒன்றான சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். சுண்டைக்காயில் பால் சுண்டை மற்றும் மலை அல்லது காட்டு சுண்டை என இரண்டு வகை உள்ளது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது. குடல் புழுக்களை அகற்றி செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மருந்தாகிறது. குறிப்பாக, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. வயிறு வீக்கம் காண்பது, வயிறு உப்புசம், வயிறு பொருமல், அஜீரணக் கோளாறுகளுக்கு சுண்டை வற்றல் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. பல சத்துக்களை உள்ளடக்கிய டானிக்காகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. சுண்டைக்காயை பயன்படுத்தி வயிற்று புழுக்களை அகற்றும் துவையல் செய்யலாம்.

No comments:

Post a Comment