ராணுவ பயிற்சி மய்யத்தில் காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

ராணுவ பயிற்சி மய்யத்தில் காலியிடங்கள்

சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான அதிகாரி பயிற்சி மய்யத்தில் (ஓ.டி.ஏ.,) எஸ்.எஸ்.சி., (டெக்னிக்கல்) பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: சிவில் / பில்டிங் கன்ஸ்ட் ரக்சன் டெக்னாலஜி 40, ஆர்க்கிடெக்சர் 2, இ.இ.இ., 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் 33, அய்.டி., 9, எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் 6, டெலிகம்யூனிகேசன் 3, எலக்ட் ரானிக்ஸ் கம்யூனிகேசன் 10, சாட்டிலைட் கம்யூனிகேசன் 1, எலக்ட்ரானிக்ஸ் 2, ஏரோநாட்டிக்கல் 5, இன்ஸ்ட்ரூமென்டேசன் 4, புரொடெக்சன் 3 உட்பட மொத்தம் 191 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். வயது: 1.10.2022 அடிப்படையில் 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. இணை வழியில் விண்ணப்பிக்க கடைசிநாள் : 6.4.2022 மாலை 6:00 மணி.

விவரங்களுக்கு: https://joinindianarmy.nic.in/Authentication.aspx

No comments:

Post a Comment