அ.இ.அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்குத் தமிழர் தலைவர் இடித்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

அ.இ.அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்குத் தமிழர் தலைவர் இடித்துரை

           தமிழ்நாடு முதல் அமைச்சரின் வெற்றிகரமான முதல் வெளிநாட்டுப் பயணம் - வாழ்த்துகிறது தமிழ்நாடு

            புதிய முதலீடு, புதிய வேலை வாய்ப்புகள்பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட முடியாது

...தி.மு.. மற்றும் பா...வுக்குத் தமிழர் தலைவர் இடித்துரை

முதல் அமைச்சராக முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்து, புதிய முதலீடுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் கொண்டு வந்துள்ள இந்தியாவிலேயே தலை சிறந்த முதல் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களின் சாதனையைப் பொறுக்க முடியாமல், ...தி.மு.. மற்றும் பா...வும் பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிடும் பரிதாபத்தை இடித்துரைத்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

 தமிழ்நாட்டில் தொழில் வளம் - வேலை வாய்ப்புகள் பெருகினால்தான், வேலை கிட்டாது பதிவு செய்துள்ள பல லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது சராசரி அரசியல் அறிவு படைத்த எவருக்கும் தெரியும்.

முந்தைய ...தி.மு.அரசில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் அளவில் வேலை வாய்ப்பைத் தேடித் தரும் மத்திய - மாநில அரசுத் திட்டங்களை பூதக் கண்ணாடியில்தான் தேடிப் பார்க்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து வந்த சில தொழில் நிறுவனங்கள்கூட, இங்கே முந்தைய அரசின் "மேஜையின்கீழ்" நடைபெற்ற விவகாரங்களால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப் போய் விட்டன.

இந்த வேதனை மிகுந்த வேலை கிட்டாத இளைஞர்களின்  வாழ்க்கையில் 'வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போல்' கரோனா கொடுந் தொற்று, ஊடரங்கு, சிறு - குறு தொழில்களும் முடக்கம் - மூலம் திருப்பூர் போன்ற தொழில் மய்யங்களே வெகுவாக பாதிக்கப்பட்டன!

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற மோடியின் வாக்குறுதி என்னாச்சு?

2014இல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதலில்  வந்து நின்ற பிரதமர் மோடி, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு என்றும், குடி மக்கள் எதிர்பார்க்காத வகையில் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் தானே 'பொத்தென்று' - வந்து குதிக்கும்  எனவும், 'சப்கா சாத், சப்கா விகாஸ்'  என்று முழக்கமிட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறந்ததோடு, வசதியாக மக்களிடம் மறக்கடிக்கப்பட்டே விட்டது; விலைவாசியோ - பெட்ரோல் - டீசல், இல்லத்தரசிகளின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எல்லாம் ஏற்றம்! தின ஏற்றத்தின் மூலம்!

அகில இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கும் நமது முதல் அமைச்சர்

இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் மக்களால் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.. ஆட்சி. பல்வேறு சோதனைகளை உறுதி குலையாது சந்தித்து, பத்து ஆண்டுகளில் முந்தைய அரசுகள் பெறாத நற்பெயரை அகில இந்திய அளவில் பெற்று, இந்தியாவின் முதல் முதலமைச்சர்  தலைமையில் - நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டில்  'திராவிட மாடல்' ஆட்சி நடைபெறுகிறது என்று ஆய்வாளர்கள் முதல் அரசியல் அறிஞர்கள் வரை அனைத்துலக ஏடுகளில் பாராட்டைப் பொழிகின்றனர்!

முதலமைச்சரின் வெற்றிகரமான முதல் வெளிநாட்டுப் பயணம்

முதலமைச்சர் வேலை வாய்ப்புகளைப் பெருக்க, பதவிக்கு வந்த பின்பு அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாக அமீரகத்திற்கு (U.A.E) துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கே முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் கடந்த 2, 3 நாள்களில் தமது பயணத்தில் வெற்றி வாகை சூடி திரும்ப உள்ளார்!

அவரது இந்த முதலீட்டாளர்களை ஈர்க்கும் பயணம் மூலம் சுமார் 2,600 கோடி ரூபாய் முதலீட்டையும், 9,700 பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்க முதல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டதோடு, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே அவர்களது வாழ்வாதாரம் பற்றியும், பிரச்சினைகள் பற்றியும் அறிந்து, தனது அமைச்சரவையில் அமைத்துள்ள ஒரு தனித் துறைக்கான இலக்குகளையும் அடையும் வண்ணம் உழைத்து வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்புக்கு உகந்ததல்ல

தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் (மேனாள் முதல்வராக இருந்தவர்) இதனை வரவேற்க வேண்டாமா? வரவேற்க மனமில்லாவிட்டாலும் கூட வாயைப் பொத்திக் கொண்டிருந்தாவது தனது கவுரவத்தையும், தாம் தற்போது  வகிக்கும் பதவியின் மாண்பினையாவது காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டாமா?

"முதலமைச்சரின் குடும்பச் சுற்றுலா"  என்று  கொச்சைப்படுத்துகின்றார்.

ஆக்கப் பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அவர் பொறுப்பை உணர்ந்திருந்தால் இப்படிப் பேசுவாரா? தமிழ்நாடு முதலமைச்சர் அரசு செலவில் தனி விமானத்தில் சென்றாரா? அல்லது அவரது கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்றாரா? என்ற விவரங்களைக்கூட சரியாக அறிந்து கொள்ளாமல், இப்படிப் பேசுவதை உளறல் என்று எடுத்துக் கொள்வதா? 10 மாதத்துக்குள் இப்படி முதல் அமைச்சருக்கு இவ்வளவுப் பெருமையா என்ற எரிச்சல்தானே!

பாலபாடம் தெரியாத தமிழ்நாடு பா... தலைவர்!

பா... என்ற கட்சியின் புதிய தலைவர் பொறுப்பேற்று நாளும் பேசிடுவது - காவிக் கட்சி .தி.மு.. முதுகில் சவாரி செய்து  பெற்ற இடங்களைக்கூட இனி எதிர்காலத்தில் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பெற முடியாத நிலைக்கு அவர்களே அன்றாடம்  பறிக்கும் குழியே தவிர வேறில்லை.

எதை எப்படி விமர்சிப்பது என்ற பால பாடத்தைக்கூட அவர் சரியாக இன்னும் கற்றுக் கொள்ளாத காரணத்தினால்தான், தமிழ்நாடு பட்ஜெட்பற்றி "ஒன்றிய அரசு திட்டங்களைக் காப்பியடித்து லேபிளை மாற்றி ஒட்டி விட்டார்கள்" என்று சொல்லிய அடுத்த நிமிடம் "அது ஒன்றுமில்லாத  சரக்கு" என்றார். அவர் யாரை விமர்சிக்கின்றார்? ஒன்றிய மோடி அரசையா? மாநில அரசையா? இது  நல்ல நகை முரண் அல்லவா என்று ஊடகவியலாளர்கள் அண்ணாமலையார்களின் "ஆரோகணம் - அவரோகணம்"பற்றிக் கேலியாக  நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

மக்கள் பாடம் போதிப்பர்

"பொய் நெல்லைக்குத்திப் பொங்கலிட முடியாது"  என்றபடி  ஏற்பட்ட தோல்விகள்கூட இவர்களின் கண்களைத் திறக்க முடியவில்லை என்பதால் -  இவர்கள் புரிந்து கொள்ளும் வகையில்  இரு கட்சித் தலைவர்களுக்கும் மக்கள் நன்கு பாடம் புகட்டுவர்!

 கிவீரமணி

தலைவர் 

திராவிடர் கழகம் 

சென்னை       

28.3.2022          

No comments:

Post a Comment