வருமான வரித்துறையில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 16, 2022

வருமான வரித்துறையில் காலிப் பணியிடங்கள்

வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு பணியிடங்களை நிரப் புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: வருமான வரி ஆய்வாளர் 1, வரி உதவியாளர் 5, எம்.டி.எஸ்., 18 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: வருமான வரி ஆய்வாளர் பணிக்கு டிகிரி, எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2, வரி உதவியாளர் பணிக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது: 18.4.2022 அடிப்படையில் வருமான வரி இன்ஸ்பெக்டர் பணிக்கு 18 - 30, எம்.டி.எஸ்., பணிக்கு 18 - 25, வரி உதவியாளர் பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பிரிவு: கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, செஸ், தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ் .

தகுதி: பன்னாட்டு, தேசிய, பல்கலை, கல்லூரி, பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : விளையாட்டு சான்றிதழ், தட்டச்சு பயிற்சி

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), I SI Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069

கடைசிநாள் : 18.4.2022 மாலை 6:00 மணி

விவரங்களுக்கு: https://incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx

No comments:

Post a Comment