இலஞ்சம் தொடங்கியது எங்கே? எங்கே? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

இலஞ்சம் தொடங்கியது எங்கே? எங்கே?

குருமூர்த்தி அய்யருக்கு

சோ' அய்யரின் மண்டை ()டி!

கேள்வி: இலவசங்களின் முன்னோடி யார்?

பதில்: ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்ற கோஷத்தை கைகழுவிவிட்டு, ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி தருகிறோம் என்று கூறி, ஓட்டு வாங்கி - 1967 தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு..தான் அதன் துவக்கம்.

('துக்ளக்', 9.2.2022, பக்கம் 11)

இதுதுக்ளக்'கின் இன்றைய ஆசிரியர் குருமூர்த்தியின் பதில்.

குருமூர்த்தியின் குருநாதர்சோ' ராமசாமி என்ன கூறுகிறார்?

இதோ:

கேள்வி: இலவசங்களை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரஸா - தி.மு..வா?

சோவின் பதில்: இவர்கள் யாரும் இல்லை. 'விபூதி, குங்குமத்தோடு நிற்காமல், புளியோதரை, வெண்பொங்கல்னு இலவசமா கொடுத்தா பக்தர்கள் வருவார்கள்னு' கண்டுபிடிச்ச கோயில்கள்தான்.

('துக்ளக்', 20.6.2012)

இதில் யார் சொல்லுவது சரி?

சோ' கூறுவதா?

குருமூர்த்தி சொல்லுவதா?

‘‘ இலவசம், இலஞ்சம் தொடங்கியது கோவிலில் என்கிறார் சோ அய்யர் - இல்லை, அரசியலில் தொடங்கியது'' என்கிறாரே குருமூர்த்தி அய்யர்!

குடுமிக் கூட்டத்திலேயே குழப்பமா?

சோ' படத்தின்முன் குருமூர்த்தி தோப்புக்கரணம் போடுவாரோ!

No comments:

Post a Comment