இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுக்க மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 19, 2022

இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுக்க மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க திட்டம்

சென்னை, பிப்.19  இலவச மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரத்தில் முறைகேடுகள் நடப்பதைத் தடுப்பதற்காக, நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க திட்டமிடப்பட்டுள்ள தாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.3,650 கோடி செலவாகிறது. இத்தொகையை மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில், மானிய செலவினங்களில் முறைகேடுகள் நடப்பதால், அதைத் தடுப்பதற்காக ஆதார்எண்ணை சம்பந்தப்பட்ட திட்டத்துடன் இணைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு, அறிவுறுத்தி உள்ளது.

வீடுகளை வாடகைக்கு விடும்உரிமையாளர்கள் பலர், வாடகைதாரர்களிடம் இருந்து இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கும் மின்சாரத்துக்கு பணம் வசூலிக் கின்றனர். தனி சமையல் அறையுடன் கூடிய ஒரு வீட்டுக்கு ஒரு மின்இணைப்பு மட்டுமே வழங்கப்படும். ஆனால், பல வீடுகளில் குறைந்த மின்கட்டணம் வருவதற்காக, ஏசி,மோட்டார் பம்ப் என தனித்தனிமின்இணைப்புகளை வைத்துள்ளனர். இதனால், மின்வாரியத்துக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இத்தகைய முறைகேடுகளை தடுப்பதற்காக, மின்நுகர்வோர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று, அவர்களின் மின்இணைப்பு எண் ணுடன் இணைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனமின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment